Farm Info

Sunday, 12 February 2023 09:52 PM , by: Elavarse Sivakumar

பிஎம் கிசான் திட்டத்தில்  விவசாயிகளுக்கு 13-வது தவணை விடுவிக்கப்பட உள்ளம் நிலையில், அதனைப் பெற சில விவசாயிகளுக்கு கிடைக்காத சூழ்நிலை உருவாகியுள்ளது. எனவே விவசாயிகள் தங்களது பெயர்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டியது அவசியமாகிறது.  

நாடு முழுவதும் சுமார் 12 கோடி பேருக்கு மார்ச் மாதத்தில் தலா 2000 ரூபாய் நேரடியாக செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொகை பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்கே நேரடியாக செலுத்தப்படும்.

பிஎம் கிசான் சம்மன் நிதி திட்டம்

விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்குவதற்காக பிஎம் கிசான் சம்மன் நிதி திட்டம் (PM Kisan Samman Nidhi Yojana) 2019ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் கோடிக்கணக்கான விவசாயக் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 6000 ரூபாய் தொகை வழங்கப்படுகிறது.

தவணை

ஆண்டுக்கு மூன்று தவணைகளாக ஒரு தவணைக்கு 2000 ரூபாய் என்ற வீதம் விவசாயிகளுக்கு பிஎம் கிசான் பணம் செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரை மொத்தம் 12 தவணைகள் விவசாயிகளுக்கு செலுத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: சீர்வரிசையுடன் கூடிய இலவச திருமணத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு! அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு! முழு விவரம் இங்கே

13ஆவது பிஎம் கிசான் தவணை

இதையடுத்து பிஎம் கிசான் திட்டத்தின் 13ஆவது தவணை தொகை 2000 ரூபாய் ஹோலி பண்டிகைக்கு முன் விவசாயிகளுக்கு செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வங்கி கணக்கில் 2000 ரூபாய்

பிஎம் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு செலுத்தப்பட்டு வரும் 2000 ரூபாய் தொகை நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கிலேயே செலுத்தப்பட்டுவிடும்.

மேலும் படிக்க:

ரூ.11,750 பருத்தி விவசாயிகளுக்கு மானியம்| ஜிங்க் சல்பேட் (அ) ஜிப்சம் உரத்திற்கு 50% மானியம்

விவசாயிகள் நேரடியாக தங்கள் விளைபொருட்களை விற்கலாம்

இவர்களுக்குக் கிடைக்காது?

விவசாய விளைநிலம் வைத்திருக்கும் அனைத்து விவசாயிகளுக்கும் இந்த 2000 ரூபாய் தொகை கிடைக்கும். எனினும், குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் பணம் கிடைக்காது.

நிலம் வைத்திருக்கும் நிறுவனங்கள், விவசாய குடும்பங்களை சேர்ந்த அரசமைப்பு பதவிகளில் இருப்போர், பணிக்காலத்தில் இருக்கும் அல்லது ஓய்வுபெற்ற அதிகாரிகள், மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் அரசு தன்னாட்சி நிறுவனங்களில் பணிபுரிவோர், மருத்துவர்கள், பொறியாளர்கள், வழக்கறிஞர்கள், மாதம் 10000 ரூபாய்க்கு மேல் பென்சன் வாங்கும் ஓய்வூதியதாரர்கள், கடைசி மதிப்பீட்டு ஆண்டில் வருமான வரி செலுத்தியோர் ஆகியோருக்கு பிஎம் கிசான் பணம் கிடையாது.

மேலும் படிக்க…

பெண்களுக்கு மானிய விலையில் ஆட்டோ!

அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 38%மாக உயர்வு-தமிழக அரசு அறிவிப்பு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)