பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் 13ஆவது தவணையில் 2000 ரூபாய் எப்போது கிடைக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதாவது அடுத்த மாதம் அல்லது ஜனவரி மாதத்தில் விவசாயிகள் வங்கிக்கணக்கில் விடுவிக்கப்படும் எனத் தெரிகிறது.
ரூ.6,000
பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா என்பது மத்திய அரசால் நடத்தப்படும் விவசாயிகளுக்கான திட்டமாகும். இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் 6000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது.
13-வது தவணை
ஒரு தவணைக்கு 2000 ரூபாய் என ஒரு ஆண்டில் மொத்தம் 3 தவணைகள் வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் இதுவரையில் மொத்தம் 12 தவணைகள் வழங்கப்பட்டு விட்டன. அடுத்து 13ஆவது தவணை எப்போது கிடைக்கும் என்று விவசாயிகள் காத்திருக்கின்றனர். அடுத்த தவணைப் பணம் விரைவில் வரவுள்ளது.
3-வது தவணை
உண்மையில், இந்த திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு ஆண்டின் முதல் தவணை ஏப்ரல் 1 முதல் ஜூலை 31 வரையிலும், இரண்டாவது தவணை ஆகஸ்ட் 1 முதல் நவம்பர் 30 வரையிலும் வழங்கப்படுகிறது. அதே நேரத்தில், மூன்றாவது தவணைக்கான பணம் டிசம்பர் 1 முதல் மார்ச் 31 வரை. அதன்படி, பிஎம் கிசான் திட்டத்தின் 13வது தவணை டிசம்பர் மாதத்தில் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்படும்.
எனவே 13-வது தவணை டிசம்பர் மாதம் அல்லது ஜனவரி மாதத்தில் விவசாயிகளின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் படிக்க...