Farm Info

Saturday, 29 August 2020 07:46 AM , by: Elavarse Sivakumar

Credit : The Hindu

கோவை, சேலம் மாவட்ட விவசாயிகள் தங்கள் காரீஃப் பருவ பயிர்களுக்கு, செப்டம்பர் 15ம் தேதிக்குள் காப்பீடு செய்யுமாறு வேளாண்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

பயிர்கள் இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படும்போது, விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்பை ஈடுகட்டும் வகையில், மத்திய அரசின் பிரதமரின் பயிர் காப்பீடுத் திட்டம் (Pradhan Mantri Fasal Bima Yojana (PMFBY) செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

இதுதொடர்பாக கோவை மாவட்ட வேளாண்மைத் துறை இணை இயக்குநர் ஆர்.சித்ராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

கோவை மாவட்டத்தில் நடப்பு காரீப் பருவத்தில் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் ஓரியண்டல் காப்பீடு நிறுவனம் மூலம் செயல்படுத்தப்படுவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. எனவே மக்காச்சோளம், பருத்தி, சோளம் ஆகிய மூன்று பயிர்களுக்குக் காப்பீடு (Crop Insurance) செய்து கொள்ளலாம்.

ஏக்கருக்கு சோளத்துக்கு ரூ.209ம், மக்காச்சோளத்துக்கு  (Corn) ரூ.588ம், பருத்திக்கு (Cotton) ரூ.459ம் பிரீமியம் தொகையாக செலுத்த வேண்டும். இழப்பீடுத் தொகை ஏக்கருக்கு சோளத்துக்கு ரூ.10,648ம், மக்காச்சோளத்துக்கு ரூ.29,388ம், பருத்திக்கு ரூ.9,189ம் வழங்கப்படும்.

பிரீமியம் தொகை செலுத்துவதற்கு செப்டம்பா் 15ம் தேதி கடைசி நாளாகும். எனவே விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், பொது சேவை மையங்கள் மற்றும் வங்கிக் கிளைகளில் பயிர் காப்பீட்டிற்கான பிரீமியம் தொகை செலுத்தலாம். கூடுதல் விவரங்களுக்கு அந்தந்த வட்டார வேளாண்மை அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேலம்

இதேபோல், சேலம் மாவட்ட வோளாண்மை இணை இயக்குநர் இளங்கோவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

காரீப் - 2020, பயிர் சாகுபடி பருவத்தில், பருவநிலை மாற்றம், பூச்சிக்கொல்லி தாக்குதல், நோய் தாக்கத்தால் ஏற்படும் பயிர் இழப்புகளை, காப்பீடு மூலம் காத்துக்கொள்ள, சேலம் மாவட்டத்தில், அக்ரிகல்சர் இந்தியா காப்பீடு நிறுவனம் (agriculture insurance company of india limited (aic)) செயல்படுகிறது.

2019 - 20ல், காரீப் பருவ பயிர்களுக்கு, காப்பீடு செய்த, 2,518 விவசாயிக்கு, 166 கோடி ரூபாய் இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது. சிறப்பு பருவத்தில் காப்பீடு செய்த, 6,002 விவசாயிக்கு, 2.38 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில், துவரை (Red gram) சாகுபடி செய்துள்ள விவசாயிகள் காப்பீடு செய்து கொள்ள, செப்., 15 கடைசி நாள் ஆகும். அதற்கு முன், அருகிலுள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி, தேசிய மயமாக்கப்பட்ட வங்கி, பொது சேவை மையங்களில், ஏக்கருக்கு, 256 ரூபாய் பிரீமியம் செலுத்தி பயிர் காப்பீடு செய்து கொள்ள, விவசாயிகள் முன்வர வேண்டும். அப்போது அடங்கல், ஆதார் அட்டை நகல், மற்றும் நடப்பு சேமிப்பு வங்கிக்கணக்கு புத்தகத்துடன் செல்ல வேண்டும்.

அதிகளவு மழை அல்லது வறட்சி போன்ற இயற்கை சீற்றங்களால், பயிர்களுக்கு ஏற்படும் மகசூல் இழப்புகளில் இருந்து பாதுகாத்திட தங்கள் பகுதிகளில் உள்ள வேளாண் விரிவாக்க மையத்தில் உள்ள வேளாண்மைத்துறை அலுவலர்களைத் தொடர்பு கொண்டும், அல்லது உழவன் செயலி மூலம் விபரம் தெரிந்துகொண்டும், உரிய காலக்கெடுவுக்கு முன், காப்பீடு செய்து பயன்பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

மேலும் படிக்க...

PMKSY:நுண்ணீர்ப் பாசனக் கட்டமைப்புகளுக்கு ரூ. 40,000 வரை மானியம் - வேளாண்துறை அறிவிப்பு!

காய்கறிகள் பயிரிடும் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.2500 ஊக்கத்தொகை - தமிழக அரசு வழங்குகிறது!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)