இராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பு ஆண்டுக்கான (2020-21) பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்துக்கு (PMFBY) வரும் 30ம் தேதிக்குள் பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட நிர்வாகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இராமநாதபுரம் மாவட்டத்தில் நடப்பு 2020-21ம் ஆண்டுக்கு திருத்தியமைக்கப்பட்ட பயிர் காப்பீட்டுத் திட்டத்தில், விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் பயிர் மகசூல் இழப்புகளுக்கு உரிய நிதியுதவி வழங்கி பாதுகாக்கவும், பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
நெல் சம்பா பயிருக்கு ஏக்கருக்கு ரூ.252.06 பிரீமியம் செலுத்த வேண்டும்.காப்பீட்டுத் தொகை ஏக்கருக்கு ரூ.16,804.04 ஆக உள்ளது.பிரீமியம் செலுத்த வரும் 30ம் தேதி கடைசி நாளாகும்.
தேவைப்படும் ஆவணங்கள்
அடங்கல்
விண்ணப்ப படிவம்,
உறுதிமொழி படிவம்,
ஆதார் அட்டை நகல்
வங்கி சேமிப்பு கணக்கு விபரம்
இவற்றுடன் அந்தந்த பகுதி தொடக்க வேளாண்மை நிர்ணயிக்கப்பட்ட பொது கூட்டுறவு சேவை கடன் சங்கங்கள் மையங்கள் மற்றும் விவசாயிகளின் வங்கிக்கணக்கு உள்ள பொது உடைமை வங்கிகளைத் தொடர்பு கொண்டு பிரீமியம் செலுத்தி பயிர் காப்பீடுக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம்.
இத்திட்டம் தொடர்பான கூடுதல் விபரங்களுக்கு அந்தந்த வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களை அணுகி உரிய விளக்கம் பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
உரங்களை வாங்குமாறுக் கட்டாயப்படுத்தும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை!