Farm Info

Saturday, 15 August 2020 07:50 AM , by: Elavarse Sivakumar

தஞ்சை மாவட்ட விவசாயிகளுக்கு, பிரதான் மந்திரி தேசிய பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ், 2019ம் ஆண்டுக்கான ரபி சிறப்புப் பருவத்திற்கான இழப்பீடாக ரூ.67.83 கோடி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தஞ்சை மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்தராவ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தஞ்சாவூரில் கடந்த ஆண்டு ஏற்பட்ட பயிர் சேதம் கணக்கிடப்பட்டு, தற்போது பயிர் காப்பீடு இழப்புத்தொகை அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதன்படி நெல் சம்பா மற்றும் தாளவாடி பயிர் சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு அக்ரிகல்சர் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா லிமிட்டெட் நிறுவனத்தினரால், ரபி பருவத்திற்கான இழப்பீடாக ரூ.67.83 கோடி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

யாரைத் தொடர்பு கொள்ளலாம்?

பயிர் காப்பீடு தொடர்பான விபரங்களைப் பெற, அக்ரிகல்சர் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா லிட்டெட், சென்னை அலுவலகத் தொலைபேசி எண் 044- 43403401, மேலாளர் திரு.சூர்யநாராயணன் கைபேசி எண் 9940326750, வேளாண்மை உதவி இயக்குநர் ஆர்.சுதா கைபேசி எண் 8610545630, மற்றும் வட்டார உதவி இயக்குநர்களைத் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

எப்படித் தெரிந்துகொள்வது?

மேலும் பயிர் காப்பீட்டு நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட வருவாய் கிராம வாரியான இழப்பீடு தொகை சதவீத விபரம், தஞ்சாவூர் இணையதளமான www.thanjavur.nic.in பதவிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனைப் பார்த்தும் தங்கள் பகுதிக்கான தொகையினை விவசாயிகள் தெரிந்துகொள்ளலாம். இவ்வாறு ஆட்சியரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

PMFBY: வாழைக்கு காப்பீடு செய்ய வரும் 31ம் தேதி கடைசிநாள்- விவசாயிகள் கவனத்திற்கு!

கம்பம் பள்ளத்தாக்கு சாகுபடிக்காக முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறப்பு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)