பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் அரியலூர் மாவட்டத்தில் மத்திய மற்றும் மாநில அரசின் மானியத்துடன் ரபி பருவம் 2022-23ல் செயல்படுத்தப்படுகிறது. விவசாயிகள் அனைவரும் நடப்பு ரபி பருவத்தில் சாகுபடி செய்துள்ள சிவப்பு மிளகாய் பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறது. பஜாஜ் அலையன்ஸ் காப்பீடு நிறுவனத்தில் பிரீமியம் தொகை ஏக்கருக்கு ரூ.885 பிரிமியம் செலுத்திட கடைசி நாள்
28.02.2023க்கு முன் பயிர் காப்பீடு செய்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. எனவே விவசாயிகள் பயிர்காப்பீடு திட்டத்தின் மூலம் காப்பீடு செய்து கால நிலை மாற்றங்களால் ஏற்படும் நஷ்டங்களை தவிர்க்க வேண்டும்.
2.பசுமைக்குடில்/ நிழல்வலைக்குடில் அமைக்க 70% மானியம்
வெள்ளரி, குடை மிளகாய், கார்னஷன் கொய்மலர், ரோஜா கொய்மலர் போன்ற பயிர்களில் பசுமைக்குடில் (Polygreen House)/ நிழல்வலைக்குடில் (Shadenet) அமைப்பதற்கு தேசிய தோட்டக்கலை இயக்கம் மற்றும் மாநில தோட்டக்கலை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், அனைத்து விவசாயிகளுக்கும் 50 சதவித மானியம் வழங்கப்படுகிறது. ஆதி திராவிட, பழங்குடியின சிறு, குறு விவசாயிகளுக்கு, கூடுதலாக 20 சதவித மானியம் ஆக மொத்தம் 70 சதவிகித மானியம் வழங்கப்படும். கூடுதலாக வழங்கப்படும் மானியத்திற்காக மாநில அரசு நிதி ஒதுக்கி உள்ளது.
3.மூலிகை தோட்டம் அமைக்க 50% மானியம் வழங்க ரூ.1 கோடி ஒதுக்கீடு
"நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்" - தமிழக மக்கள் நோயற்று வாழ தமிழக அரசு தோட்டக்கலை துறையின் மூலம் வீடுகளில் மூலிகை தோட்டம் அமைக்க ரூ. 1 கோடி நிதி ஒப்பளிப்பு வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மூலிகை தோட்டம் அமைக்க, 1,500 ரூபாய் மதிப்புள்ள மூலிகை தொகுப்பு, 50 சதவீத மானியத்தில், 750 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. வகைக்கு 2 வீதம், துளசி, திருநீற்றுபச்சிலை, வல்லாரை, கற்பூரவல்லி, கற்றாழை, பிரண்டை, கீழாநல்லி, ஆடாதொடை, திப்பிலி, அஸ்வகந்தா, ஆகிய, 10 வகையான மூலிகைச் செடிகள் வழங்கப்பட உள்ளன.
4.ஏக்கருக்கு ரூ.10,000 விவசாயிகளுக்கு மானியம் அறிவிப்பு
திருவாரூரில் விவசாயிகளுக்கு தாட்கோ திட்டத்தின் கீழ் ரூ.10 ஆயிரம் மானியம் வழங்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. தாட்கோ (தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகம்) சார்பில் 2022-23ஆம் நிதியாண்டில் பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 1000 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளின் கால்நடைகளுக்குத் தேவைப்படும் தீவனப்புல் வளர்க்க விதைத் தொகுப்பு மற்றும் புல்கறணைகள் வழங்க ரூ.1 கோடி செலவில் ஒரு பயனாளிகளுக்கு ஏக்கருக்கு ரூ.10,000 என்ற மானியம் ஒதுக்கீடு செய்து அரசாணை வரப்பெற்றுள்ளது.
5.பனையில் இருந்து மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்க 50% மானியம்!
தோட்டக்கலை- மலைப்பயிர்கள் துறை சார்பாக, பனை மேம்பாட்டு இயக்கம் 2022-23 ஆம் ஆண்டிற்கான திட்டத்தின் கீழ் பனையில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பதற்கான உபகரணங்கள் மானிய விலையில் கிடைக்கப்பெறுகிறது. ஒரு அலகிற்கு 50 சதவீதம் மானியமாக ரூ.4000/- வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் விண்ணப்பிக்க விரும்புவோர் ஆதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். இணையதளம் திரையில் தோன்றும். http://tnhorticulture.tn.gov.in/tnhortnet/index.php
6.விவசாயிகளுக்கு பனைமரம் ஏறுவதற்கு அறுவடை செய்வதற்கும் உதவும் உபகரணங்களுக்கு 75% மானியம்!
தமிழ்நாடு தோட்டக்கலை மேம்பாட்டு முகமை சார்பாக, பனை மேம்பாட்டு இயக்கம் 2022-23 வழங்கும் பனை ஏறும் விவசாயிகளுக்கு பனைமரம் ஏறுவதற்கும், அறுவடை செய்வதற்கும் உகந்த உபகரணங்கள் வழங்குதல், ஒரு அலகிற்கு 75 சதவீதம் மானியமாக ரூ.4500 வழங்கப்படும். இத் திட்டத்தில் பயன்பெற திரையில் தோன்றும் http://www.tnhorticulture.tn.gov.in/tnhortnet/registration_new.php என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
7.சிறுதானிய இயக்கத்தின்கீழ் சிறுதானியங்களின் கொள்முதல் என்ற தலைப்பில் ஆய்வுக் கூட்டம்
கடந்த வெள்ளிக்கிழமை தலைமை செயலகத்தில், கூட்டுறவு, உணவு (ம) நுகர்வோர் பாதுகாப்பு துறையின் அரசு முதன்மை செயலாளர் திரு.J.ராதாகிருஷ்ணன், மற்றும் வேளாண்மை - உழவர் நலத்துறையின் வேளாண் உற்பத்தி ஆணையர் (ம) அரசு செயலாளர் திரு. சி. சமயமூர்த்தி அவர்களின் தலைமையில், சிறுதானிய இயக்கத்தின்கீழ் சிறுதானியங்களின் கொள்முதல்,சேமிப்பு (ம) விநியோகம் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது. மேலும் வேளாண்மைத்துறை இயக்குநர், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை இயக்குநர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
8.உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்டம் குறித்த விழிப்புணர்வு வாகன பிராச்சாரம் தொடக்கம்
நாமக்கல் மாவட்ட வேளாண்மை உதவி இயக்குநர் சித்ரா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, நாமக்கல் வட்டார வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்டத்தில் சத்துமிகு சிறுதானியங்கள் குறித்த திட்ட விளக்க விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தினை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நேற்று வேட்டாம்பாடி கிராமத்தில் நடைபெற்றது.
9.விழுப்புரம் மாவட்டத்தில் நிவாரண உதவி: அமைச்சர் பொன்முடி
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கினங்க, விழுப்புரம் மாவட்டம், வானூர் ஒன்றியம், பிள்ளைச்சாவடி ஊராட்சி, கோட்டக்குப்பம் நகராட்சி, முதலியார் சாவடி குப்பம், கீழ்புத்துப்பட்டு, இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் ஆகிய பகுதிகளில் மாண்டஸ் புயலினால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார் உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி.
10. CM Stalin : புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் ஆய்வு செய்து நிவாரண உதவிகளை வழங்கினார்
ECR, காசிமேடு பகுதிகளில் Mandous புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கினார் முதல்வர் ஸ்டாலின். இயற்கைப் பேரிடரிலிருந்து மக்களைக் காத்திட இரவு பகல் பாராமல் முழு அர்ப்பணிப்போடு தங்களை ஈடுபடுத்திக் கொண்ட அமைச்சர் பெருமக்கள், MLA & MP-க்கள் - உள்ளாட்சிப் பிரதிநிதிகள், மேயர்கள் - துணை மேயர்கள், கவுன்சிலர்கள், மாநகராட்சி ஊழியர்கள், மின்சார வாரியம் - காவல்துறை - தீயணைப்புத் துறை ஊழியர்கள் - தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு என் பாராட்டுகளும் - நன்றியும்! தெரிவித்துக்கொள்வதாக தெரிவித்தார். பெருமளவில் பாதிப்புகள் இல்லையென்றாலும், ஒரு சில இடங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் விரைந்து சீர்செய்யப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.
11. வானிலை தகவல்
தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடம். அதே நேரம் நாளையும் இன்னிலை நீடிக்கலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மீனவர்களுக்கான எச்சரிக்கை அடுத்து வரும் இரண்டு நாட்களுக்கு லட்சதீவு பகுதிகள், கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும் படிக்க:
பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு, விரைவில் மஞ்சப்பை ரயில்
PM கிசான்| உபகரணங்கள் 75% மானியம்| TN Climate Summit 2022| e-nam குறித்து ஆய்வு| மாண்டுஸ் புயல்