நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 13 December, 2022 6:31 PM IST

பிரதமரின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் (Prdhan Mantri Formalization Of Micro Food Processing Enterprises Scheme - PMFME) 2020-21ஆம் ஆண்டு முதல் 2024-2025 வரை 5 ஆண்டுகளுக்கு செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் ஒரு மாவட்டத்திற்கு ஒரு விளைபொருள் என்ற அணுகுமுறையில் நாமக்கல் மாவட்டத்தில் கோழி மற்றும் கோழித் தீவனம் சார்ந்த பொருட்கள் உற்பத்தி, உணவு பதப்படுத்தும் மற்றும் வேளாண் சார்ந்த மதிப்புக் கூட்டு தொழில் தொடங்க திட்ட மதிப்பீட்டில் 10% தொழில் முதலீடு மற்றும் 90 சதவீதம் கடன் பெற்று அவற்றில் 35% அல்லது அதிகபட்சமாக ரூ.10 இலட்சம் வரை மானியம் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் விண்ணப்பிக்கும் இணையதளம் திரையில் தோன்றும். http://pmfme.mofpi.gov.in/pmfme 

2.புதிய வேளாண்மை கண்டுபிடிப்பிற்கு ரூ. 1 லட்சம் பரிசு

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை வேளாண்மை நிதிநிலை அறிக்கையில் வேளாண்மையில் சிறப்பாக செயலாற்ரும் விவசாயிகளுக்கு பரிசு என்ற தலைப்பின் கீழ் இயற்கை வேளாண்மை விளைபொருட்கள் ஏற்றுமதி, வேளாண்மையில் புதிய உள்ளூர் விவசாயி தொழில்நுட்பம் மற்றும் புதிய இயந்திரங்கள் கண்டுபிடிக்கும் விவசாயிகளை ஊக்குவித்து பரிசளிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 2 பிரிவுகளில் தலா 1 லட்சம் பரிசு வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்ப படிவம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் கிடைக்கப்பெறும். அதனை பூர்த்தி செய்து பதிவு கட்டணமாக ரூ.100 மட்டும் வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகம் மூலம் உரிய அரசு கணக்கு தலைப்பில் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் டிசம்பர் 15 2022 ஆகும்.

3.இயற்கை வேளாண் பொருட்களை விற்பனை செய்ய புதிய தளம்

மத்திய வேளாண் அமைச்சகம் புதிதாக இயற்கை வேளாண் பொருட்களை விற்பனை செய்ய இணையதளம் ஒன்றை அறிவித்துள்ளது. சுற்று சூழலை மேம்படுத்துவதற்காக, விவசாயிகளில் பலர் இயற்கை விவசாயம் செய்து வருகின்றனர், ஆனால் அவர்களின் விலை பொருட்களை விற்பனை செய்ய சரியான வழி கிடைக்கிவில்லை, அதற்கு உதவும் வகையில் இணையதளம் http://jaivikkheti.in  இயற்கை வேளாண்மை மற்றும் அதன் நன்மைகளை மேம்படுத்துவதற்கான சிறந்த தளமாக திகழும். இந்த இணையதளத்தின் மூலம் விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் இயற்கை பொருட்களை சரியான விலைக்கு விற்க முடியும்.  

4.கோயம்பேடு மார்க்கெட்டை கார்பன் நியூட்ரல் மார்க்கெட்டாக மாற்றும் பணியில் IIT

கோயம்பேடு சந்தையில் அங்காடி நிர்வாக குழு மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்ட உரிமம் பெற்ற கடைகளுக்கு கடை எண் பொறிக்கப்பட்ட ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட உள்ளது. இதன் மூலமாக காய்கறி, பழம், மளிகை உள்ளிட்ட பொருட்களை ஏற்றி வரும் வாகனங்களை அந்தந்த கடைகளுக்கு வழங்கப்பட்டுள்ள ஸ்மார்ட் கார்டு மூலம் மட்டுமே சந்தை வளாகத்திற்குள் செல்ல அனுமதி அளிக்கப்படும். விரைவில் கோயம்பேடு மார்க்கெட்டை கார்பன் நியூட்ரல் மார்க்கெட்டாக மாற்றும் பணியில் IIT மும்பரம் காட்டி வருகிறது. 

5.கரும்பு விவசாயிகள் போராட்டம்: விவசாயிகள் தலைவர்கள் கைது

கர்நாடக மாநில கரும்பு விவசாயிகள் சங்கம் மற்றும் மாநில விவசாயிகள் அமைப்புகள் ஒன்றியம் சார்பில் கரும்பு விவசாயிகள் 22 நாட்களாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில், தற்போது போராட்டம் தீவிரமடைந்துள்ளது. ஜி20 மாநாடு நடைபெறும் தேவனஹள்ளியில் உள்ள தனியார் ஓட்டல் முன்பு கருப்புக் கொடி காட்ட விவசாயிகள் தலைவர்கள் செவ்வாய்க்கிழமை திட்டமிட்டனர். இந்நிலையில், யலஹங்கா, ஹெப்பாள் மேம்பாலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மாநில விவசாயிகள் சங்கங்களின் ஒன்றியத் தலைவர் குரு புரு சாந்தகுமார் உள்பட விவசாயத் தலைவர்கள் பலரை போலீஸார் கைது செய்துள்ளனர். போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு விவசாயிகள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். கரும்புக்கு உரிய விலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி விவசாயிகள் கடந்த 22 நாட்களாக 24 மணி நேரமும் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

6.சிங்கிளா இருக்கும் என் முன்னாடி போட்டோ ஷூட்டா-? கடுப்பாகிப்போன யானை!

பன்மனத்தில் உள்ள பன்மன சுப்ரமணிய சுவாமி கோவிலில் அண்மையில் திருமணம் ஆன மணமக்கள் கிரீஷ்மா - ஜெய்ஷங்கர் புகைப்படங்கள், செல்பி, வீடியோ என்று பல்வேறு கோணத்தில் போட்டோ ஷூட் செய்துக்கொண்டியிருந்தனர். மணமக்களின் செயலால் ஆத்திரமடைந்த கோவில் யானை சரவணன் தன் அருகே கிடந்த தென்னை மட்டையை தும்பிக்கையால் எடுத்து மணமக்கள் மீது வீசியது. இதில், தென்னை மட்டை மணமக்கள் தலைக்கு இடையே பறந்து சென்றது. இதில், மணமகனின் தலையை அந்த தென்னை மட்டை உரசி சென்றது. யானை வீசியதில் மணமக்களின் தலைக்கு இடையே தென்னை மட்டை பறந்து வருவதை புகைப்பட கலைஞர்கள் வீடியோவாக எடுத்துள்ளனர்.

7.12ஆம் வகுப்பு மாணவர்கள் தமிழ்நாட்டில் ‘நான் முதல்வன்’ இணையதளம் மூலம் தொழில் வழிகாட்டுதலைப் பெறுகிறார்கள்

நான் முதல்வன் ' திட்டத்தின் கீழ் , மாநிலம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள், தங்கள் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் நிபுணர்களிடமிருந்து தொழில் வழிகாட்டுதலைப் பெற்று வருகின்றனர். இந்த ஆண்டு முதல் முறையாக, திங்கள்கிழமை முதல், மாணவர்கள் தங்கள் தனிப்பட்ட விவரங்கள் மற்றும் விருப்பமான தொழில் விருப்பங்களை 'நான் முதல்வன்' இணையதளத்தில் பதிவேற்றத் தொடங்கியுள்ளனர். இந்த ஆண்டு மார்ச் 1 ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களால் தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் ஒரு பகுதியாக , பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பல்வேறு துறைகளில் தொழில் மற்றும் உயர்கல்வி விருப்பங்கள் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் அடங்கிய கையேடு தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டது.

8.2022 KOREA AGRITECH TRADESHOW ஏற்பாடு

2022 கொரியா அக்ரிடெக் டிரேட்ஷோ (காமிகோ இந்தியா சென்டர்) வருகிற டிசம்பர் 15ஆம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது Wevio Global இன் முன்முயற்சியுடன் PJTSAU மற்றும் AgHub ஆகியவற்றின் ஆதரவுடன் தொழில்நுட்ப இன்குபேஷன் + செயல்விளக்க முதலீடு + வணிக மேம்பாடு மற்றும் தொழில் வளர்ச்சி ஆகிய தலைப்புகளில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வு ஹைதராபாத்தில் நடைபெற உள்ளது.

9.KJ சௌப்பாலில் வேளாண் துறையில் சாதித்தவர்கள் வருகை

விவசாயம் மற்றும் விவசாயிகளின் பார்வையில் விவசாயத் துறையில் மேலும் மேலும் முன்னேற்றத்திற்காக கிரிஷி ஜாக்ரன் இன்று வரை 26 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது, அந்த வகையில் நேற்று நடந்த கிரிஷி ஜாக்ரனின் கே.ஜே சௌபாலில் BEAM இன் CEO நிலத்பால் தாக்கர், சுமன் தவாஸ் மற்றும் சவுரப் கோஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமையாசிரியர் எம்.சி.டோமினிக் மற்றும் பணியாளர்கள் அனைவரும் வாசகர்களை வரவேற்றனர். BSE Agricultural Markets Limited BEAM என்பது உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் பங்குச் சந்தையான BSE இன்வெஸ்ட்மென்ட் லிமிடெட்டின் துணை நிறுவனமாகும். விவசாயப் பொருட்களுக்கான சிறந்த மதிப்பை உருவாக்க, தற்போதுள்ள மதிப்பு சங்கிலி பங்கேற்பாளர்களின் பங்கை மறுவரையறை செய்வதன் மூலம், விவசாய சந்தைகளுக்கான நவீன சுற்றுச்சூழல் அமைப்பை BEAM உருவாக்குகிறது என்பது குறிப்பிடதக்கது.

10. ராய்ச்சூர், மான்வியில் சிறுமிக்கு ஜிகா வைரஸ்: மாநிலத்தில் முதல் வழக்கு!

ராய்ச்சூர் மாவட்டம் மான்வி தாலுகாவில் ஐந்து வயது சிறுமிக்கு ஜிகா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்ட முதல் வழக்கு இதுவாகும். உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சிறுமி பெல்லாரியில் உள்ள விம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டிசம்பர் 5-ம் தேதி, அறிகுறி உள்ள மூவரின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு புனேவில் உள்ள தேசிய வைராலஜி ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டது. கடந்த டிசம்பர் 8ம் தேதி, அறிக்கை பெறப்பட்டு, ஒருவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. சிறுமி எங்கும் பயண செய்யவில்லை என்று சுகாதாரத் துறை அமைச்சர் கே. சுதாகர் குறிப்பிட்டார்.

மேலும் படிக்க:

PMFBY update| Polygreen house அமைக்க 70% மானியம்| மூலிகை தோட்டத்திற்கு 50% மானியம்| நிவாரண உதவிகள்

கோக்கோ முந்திரி சாகுபடிக்கு ரூ.12,000 மானியம்: Apply Today!

English Summary: PMFME: Rs.10 lakh subsidy| Sugarcane farmers protest My previous photo shoot? Fierce elephant
Published on: 13 December 2022, 03:36 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now