Farm Info

Thursday, 16 December 2021 01:42 PM , by: Deiva Bindhiya

PMKSY: Rs 93,068 crore welfare scheme for farmers!

பிரதான் மந்திரி க்ரிஷி சிஞ்சாய் யோஜனா (PMKSY) திட்டத்தை 2021 ஆம் ஆண்டு முதல் 2026 ஆம் ஆண்டு வரை, அதாவது ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கும் திட்டத்திற்கு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது. அரசு அறிக்கையின்படி, இதற்கான மொத்த செலவு ரூ.93,068 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. மத்திய அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம், தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் மற்றும் ஜல் சக்தி அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் ஆகியோர், இத் தகவலைத் தெரிவித்தனர். 

பிரதான் மந்திரி கிரிஷி சிஞ்சாய் யோஜனா திட்டத்தை 2021-22 முதல் 2025-26 வரை தொடர அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது, இதன் மூலம் சுமார் 22 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள், அவர்களில் 2.5 லட்சம் பட்டியல் சாதியினர் மற்றும் 2 லட்சம் பழங்குடியினர் விவசாயிகள் பயனடைவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

நிதி உதவி வழங்கும் திட்டம்(Financial Assistance Scheme)

விரைவுபடுத்தப்பட்ட நீர்ப்பாசனப் பயன் திட்டத்தின் கீழ் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள 60 திட்டங்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தப்படும். அறிக்கையின்படி, மேற்பரப்பு நீர் ஆதாரங்கள் மூலம் நீர்நிலைகளை புத்துயிர் பெறுவதன் கீழ் 4.5 லட்சம் ஹெக்டேர்களும், பொருத்தமான தொகுதிகளில் நிலத்தடி நீர் பாசனத்தின் கீழ் 1.5 லட்சம் ஹெக்டேர்களும் பாசனம் செய்யப்படும்.

விரைவு நீர்ப்பாசனப் பயன் திட்டம் என்பது மத்திய அரசின் முதன்மைத் திட்டமாகும். நீர்ப்பாசனத் திட்டங்களுக்கு நிதி உதவி வழங்குவதே இதன் முக்கிய நோக்கமாகும். 2021-26 ஆம் ஆண்டில் AIBP இன் கீழ் கூடுதல் நீர்ப்பாசனத் திறன் 13.88 லட்சம் ஹெக்டேராக உயர்த்தப்பட உள்ளது. புதிதாக சேர்த்த 60 திட்டங்களில் கவனம் செலுத்துவது தவிர, அவற்றுடன் தொடர்புடைய 30.23 லட்சம் ஹெக்டேர் கமாண்ட் ஏரியா மேம்பாடும் உள்ளது, கூடுதலாக மேலும் பல திட்டங்களை தொடங்க வாய்ப்புள்ளது. பழங்குடியினர் உள்ள பகுதிகள், வறட்சிப் பகுதிகளில், திட்டங்களைச் சேர்ப்பதற்கான விதிமுறைகளில் தளர்வு கொடுக்கப்பட்டுள்ளன.

சாகுபடி நிலத்தை விரிவுபடுத்த HKKP(HKKP to expand cultivable land)

ஹர் கேத் கோ பானி என்ற (HKKP), பண்ணைகளுக்கான அணுகலை அதிகரிப்பதையும், உறுதி செய்யப்பட்ட நீர்ப்பாசனத்தின் கீழ் சாகுபடி நிலத்தை விரிவுபடுத்துவதையும் நோக்கமாகக் கொண்டதாகும். HKKP-இன் கீழ் நீர்ப்பாசனம் மற்றும் மறுசீரமைப்பு- மேம்பாடு ஆகியவை PMKSY இன் கூறுகளாகும், மேலும் 4.5 லட்சம் ஹெக்டேர்களை பாசனத்தின் கீழ் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நீர் ஆதாரங்களை புத்துயிர் பெறுவதன் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் நீர் ஆதாரங்களுக்கு புத்துயிர் பெறுவதற்கான நிதிக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

 

கிசான் மன் தன் யோஜனா

மோடி அரசின் கிசான் மன் தன் யோஜனா திட்டம், 31 மே 2019 அன்று தொடங்கப்பட்டதாகும். இதன் கீழ், நாட்டில் உள்ள அனைத்து சிறு மற்றும் குறு நில விவசாயிகளுக்கும், 60 வயது பூர்த்தி ஆன பின், விவசாயிகளுக்கு மாதம் 3,000 ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இதன் கீழ், பயனாளிகளுக்கு ஓய்வூதியமாக மாதம் ரூ.3000 வழங்கப்படுகிறது. இதன் மூலம் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 36000 ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.

மேலும் படிக்க:

விவசாயிகளுக்கு நற்செய்தி! விவசாய பொருட்களின் ஏற்றுமதியில் ஏற்றம்!

FPO-வின் கேம் சேஞ்சர் திட்டம்! வங்கிகள் கூறுவது என்ன?

 

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)