தங்கள் நாட்டில் போர் தொடுத்து, தொன்மை நகரங்களைச் சின்னாபின்னமாக்கிய ரஷ்ய வீர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தங்கள் வயலில் விளைந்த செர்ரிப் பழங்களை உக்ரைன் விவசாயிகள் விஷமாக்கினர். அதனை சாப்பிட்ட ரஷ்ய வீரர்களுக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது தங்களது பரிசு என விவசாயிகள் கூறுகின்றனர்.
போர் தாக்குதல்
உக்ரைன் மீது கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. இதனையடுத்து ரஷ்யா மீது உலக நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ளன. இருப்பினும் இதனை கண்டு கொள்ளாத ரஷ்யா சமீபத்தில் டான்பாஸ் நகரை கைப்பற்றியுள்ளது. ரஷ்ய வீரர்கள் பொழிந்த குண்டு மழை மற்றும் பீரங்கித் தாக்குதலில், உக்ரைனின் தொன்மைவாய்ந்த நகரங்களைச் சல்லடையாகச் துளைத்து சின்னாபின்னமாக்கின.
இந்நிலையில், உக்ரைனில் சுமார் 2 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் செர்ரி பழங்கள் உற்பத்தி செய்யப்படும் மெலிடோபோல் நகரை ரஷ்யா ஆக்கிரமித்துள்ளது. இதனால், கோபமடைந்த விவசாயிகள், செர்ரி பழங்களை விஷமாக்கி எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும், அதனை அபகரித்து சென்று சாப்பிட்ட ரஷ்ய ராணுவ வீரர்களுக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக உக்ரைன் நகர மேயர் ஒன்று தெரிவித்துள்ளார்.
இது ரஷ்யாவிற்கு நாங்கள் அளித்த பரிசு என உக்ரைன் விவசாயிகள் கூறியுள்ளனர்.எதையும் செய்வான் மனிதன் என்பதற்கு, இந்த விவசாயிகளே சாட்சி.
மேலும் படிக்க...