
வெள்ளை நாவல் பழம் சாகுபடியிலும் நல்ல இலாபத்தை ஈட்டலாம் என விவசாயிகள் சொல்கின்றனர். அதிலும் செம்மண் நிலத்திலில் வெள்ளை நாவல் பழம் நன்றாக வளரும் என கூறப்படுகிறது.
வெள்ளை நாவல் பழம் (White Novel Fruit)
இந்தியாவில் எல்லாப் பகுதிகளிலும் வளரும். சிறப்பாக ஆற்றோரப் படிகைகளில் மற்றும் கடற்கறையோரங்களில் நன்கு வளரும். பம்பாய் மாநிலத்தில் எங்கும் உள்ளது. ஈரமான தென் கர்நாடகா, ராயல் சீமைப் பகுதிகளிலும் வளர்க்கப்படுகிறது. மரம் பலம் வாய்ந்ததாக இருக்கும். இலைகள் ஒரே மாதிரி இருக்காது. மாறுபட்டு இருக்கும். இலை நுனி கூர்மையானது.
வெள்ளை நாவல் பழம் சாகுபடி குறித்து, திருத்தணி அடுத்த, கொத்தூர் கிராமத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயி கே. வெங்கடபதி கூறுகையில், எங்களுக்கு சொந்தமான நிலம், மலை மற்றும் மண் சார்ந்த செம்மண். டிராகன், முள்சீதா உள்ளிட்ட பல பழங்களை சாகுபடி செய்துள்ளேன். அதில், ஊடுபயிராக வேர்க்கடலை, இஞ்சி மற்றும் ஏலக்காய் ஆகிய விளைப்பொருட்களை சாகுபடி செய்துள்ளேன்.அந்த வரிசையில், வரப்பு பயிராக வெள்ளை நாவல் பழச்செடிகளை சாகுபடி செய்துள்ளேன்.
குளிர் பிரதேசங்களில் விளையும் இச்செடி, நம் ஊரின் மலை மண்ணுக்கும் அருமையாக வளர்கிறது. செடி நட்டு இரண்டாண்டு ஆகியுள்ளதால், காய்கள் காய்க்க துவங்கி உள்ளன. இது, கறுப்பு மற்றும் இளஞ்சிவப்பு நிற நாவல் போல் இல்லாமல், சுவையில் சற்று மாறுபடும். இருப்பினும், நாவல் பழங்களில் கிடைக்கக்கூடிய அனைத்து விதமான சத்துகள் மற்றும் மருத்துவ குணங்கள் இருக்கும். அதனால், மக்களிடம் வரவேற்பு இருக்கிறது என்று இவர் கூறினார்.
தொடர்புக்கு
கே. வெங்கடபதி 93829 61000
மேலும் படிக்க
தொடர் வருமானத்திற்கு கோவைக்காய் விவசாயத்தை உடனே தொடங்குங்கள்!