வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 22ந்தேதி முதல் நாடாளுமன்றத்திற்கு வெளியே தினமும் போராட்டத்தில் ஈடுபட விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.
விவசாயிகள் எதிர்ப்பு (Farmers protest)
வேளாண் சட்டத் திருத்தங்களை எதிர்த்து டெல்லி, ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட வட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயகள் 6 மாதங்களுக்கும் மேலாக, டெல்லியில் உள்ள மாநில எல்லைகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
அவர்களை முடக்கும் நடவடிக்கைகளில் மத்திய அரசு ஆர்வம் காட்டி வருகிறது. ஆனால், சட்டங்களை வாபஸ் பெறும் வரை போராட்டத்தை விலக்கிக்கொள்ள மாட்டோம் என்பதில் விவசாயிகள் உறுதியாக உள்ளனர்.
கூட்டத் தொடர் (Parliament Session)
இதனிடையே நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர், மழைக்கால கூட்டத்தொடர் மற்றும் குளிர்கால கூட்டத்தொடர் என ஆண்டுதோறும் 3 கூட்டத்தொடர்கள் நடைபெற்று வருகின்றன.
கொரோனா 2வது அலை (Corona 2nd wave
கொரோனா 2வது அலை காரணமாக இந்த ஆண்டு பட்ஜெட் தொடரில் பாதிப்பு ஏற்பட்டிருந்தது.
மழைக்கால கூட்டத்தொடர் (Rainy season meeting)
இந்நிலையில், நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் வரும் 19ந்தேதி தொடங்கி 19 நாட்கள் நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் பல்வேறு விவகாரங்களை கிளப்பும் என கூறப்படுகிறது.
இந்த சூழலில் சம்யுக்த் கிசான் மோர்ச்சா என்ற விவசாய அமைப்பு வெளியிட்டுள்ள எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
வேளாண் பெருமக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இந்தக் மழைக்கால கூட்டத்தொடரை பயன்படுத்த வேண்டும்.
கடிதம் (Letter)
இதற்காக அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் எச்சரிக்கை கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்படும்.
போராட்ட அறிவிப்பு (Notice of protest)
மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்திற்கு வெளியே வரும் 22ந்தேதி தொடங்கி கூட்டத்தொடர் முடியும் வரையில், தினமும் 200 பேர் போராட்டத்தில் ஈடுபடுவது என்று முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
கொரோனாவை கட்டுப்படுத்த செப்டம்பர் மாதத்திற்குள் 10% மக்களுக்கு தடுப்பூசி: உலக சுகாதார அமைப்பு!
2020 ஆம் ஆண்டில் 4-இல் ஒருவருக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைக்கவில்லை: யுனிசெப் தகவல்