ஸ்டெர்லைட் தாமிர ஆலையை மீண்டும் திறக்கக் கோரி தூத்துக்குடியில் இருந்து MAK இண்டஸ்ட்ரீஸின் மாணிக்கம் அத்தப்ப மற்றும் தூத்துக்குடி மக்கள் வாழ்வதார பாதுகாப்பு சங்கத்தை சேர்ந்த எஸ் தியாகராஜன் ஆகியோர் தலைமையில் தூத்துகுடியில் இருந்து 50 பேர் கொண்ட போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டம் இன்று தில்லியில் உள்ள ஜன்தர் மன்தரில் காலை 11:30 மணியளவில் தொடங்கியது.
வாழைப்பழத்திற்கு MSP விலை ஒரு கிலோவுக்கு ரூ.18.90
நாட்டில் வாழைப்பழம் அதிகம் உற்பத்தியாகும் மாநிலங்களில் மகாராஷ்டிராவும் ஒன்று. இம்மாநிலத்தில் வாழைப்பழம் அதிகம் உற்பத்தியாகும் மாநிலங்களில் மகாராஷ்டிராவும் ஒன்று. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக உற்பத்தி செய்யப்படும் வாழைக்கு விலைக்கு ஏற்ப உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். எனவே, மகாராஷ்டிராவின் வாழைப்பழ கிசான் சங்கத்தினர் சனிக்கிழமை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை சந்தித்தனர், வாழைப்பழத்திற்கு MSP கோரி. இதன் போது வாழைப்பழம் கிலோவுக்கு ரூ.18.90 ஆக நிர்ணயம் செய்ய வேண்டும் என வாழை கிசான் சங்கம் முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளது. மேலும், இதனுடன் வாழை செடிகளை விற்பனை செய்யவும் அனுமதி கோரியுள்ளனர்.
ஒரே நாளில் 5.23 கோடி கிலோ நெல் கொள்முதலில் சாதனை!
அனைத்து கொள்முதல் நிலையங்களிலும் சேர்த்து, நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும், 5.13 கோடி கிலோ நெல் கொள்முதல் செய்து சாதனை படைக்கப்பட்டு உள்ளது. மத்திய அரசின் இந்திய உணவு கழகம் சார்பில், தமிழக விவசாயிகளிடம் இருந்து நுகர்பொருள் வாணிப கழகம் நெல் கொள்முதல் செய்கிறது. நடப்பு கொள்முதல் சீசன் , 2022 செப்டம்பர் 1ம் தேதி துவங்கியது. இருப்பினும், பொங்கல் முடந்ததை அடுத்து, தற்போது தான் நெல் அறுவடை முழுவீச்சில் நடக்கிறது. எனவே விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்வதற்காக, தற்போது டெல்டா உட்பட நெல் விளைச்சல் உள்ள மாவட்டங்களில், 2,519 நேரடி நிலையங்கள் செயல்படுகின்றன என்பது குறிப்பிடதக்கது.
ஆகாயத்தாமரை செடிகளில் இருந்து இயற்கை உரம்: வனத்துறை அறிவிப்பு!
திருவாரூர் மாவட்டம் வடுவூர் பறவைகள் சரணாலயம் அமைத்துள்ள ஏரியில் படர்ந்துள்ள ஆகாயத் தாமரை செடிகளை மாவட்ட வனத்துறை, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், கல்லூரி மாணவ, மாணவிகள், மற்றும் பொதுமக்கள் சேர்ந்து அகற்றும் பணி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் பசுமை தமிழ்நாடு இயக்கம் இயக்குனர் தீபக் ஸ்ரீவத்சவா தலைமை தாங்கினார். பின்னர் கூடுதல் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் தீபக் ஸ்ரீவத்சவா கூறுகையில், வடுவூர் ஏரி 316 ஏக்கர் பரப்பளவு கொண்டது. பறவைகள் சரணாலயமாக விளங்கும் இந்த ஏரியில் ஆகாயத்தாமரை செடிகள் படர்ந்துள்ளது. வடுவூர் ஏரியில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்றி அதனை மக்கிய இயற்கை உரமாக மாற்றும் பணி 5 ஏக்கர் பரப்பளவில் நடக்கிறது. இதை 45 நாட்களில் மட்க வைத்து இயற்கை உரமாக மாற்றி அதை தமிழ்நாடு வனத்துறைக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
4வது பட்டமளிப்பு விழாவில் வேளாண் தொடக்க நிறுவனங்களின் கண்காட்சி
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள சவுத்ரி சரண் சிங் தேசிய வேளாண் சந்தைப்படுத்தல் நிறுவனத்தின் 4வது பட்டமளிப்பு விழாவில், மத்திய அமைச்சர் நரேந்திர சிங் டோமர் மற்றும் வேளாண்மைக்கான மத்திய இணை அமைச்சர் கைலாஷ் சவுத்ரி ஆகியோர் வேளாண் தொடக்கங்களின் கண்காட்சியைத் தொடங்கிவைத்து பார்வையிட்டனர். மேலும் பட்டமளிப்பு விழாவில் உரையாற்றி, மாணவ மாணவியருக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.
மேலும் படிக்க:
வேளாண் மாணவிகள் பஞ்சகவ்யா, சிறுதானிய ஆண்டு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி
கரும்புக்கான பரிந்துரை விலை டன்னுக்கு ரூ.4,000 வழங்க கோரி விவசாயிகள் முற்றுகை