Farm Info

Thursday, 24 September 2020 07:45 AM , by: Elavarse Sivakumar

விருதுநகர் மாவட்டத்தில் நடப்பு ஆண்டு காரீப் பருவத்தில் 200 மெ.டன் உளுந்து கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. 

இது தொடர்பாக ஆட்சியர் இரா.கண்ணன் விடுத்துள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

  • உளுந்து விவசாயிகளின் நலனை பாதுகாக்கும் நோக்கத்தில் விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதற்கு மத்திய அரசின் விலை ஆதாரத் திட்டத்தின்கீழ் நிறுவனத்தின் மூலம் உளுந்து கொள்முதல் செய்ய தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

  • அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர் விற்பனைக்குழுவின் கீழ் இயங்கும் விருதுநகர் மற்றும் அருப்புக்கோட்டை ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மூலம் 200 மெட்ரிக் டன் உளுந்து கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு செயல்படுத்தப்படவுள்ளது.

  • விலை ஆதார திட்டத்தின் மூலம் கொள்முதல் செய்யப்படவுள்ள உளுந்தில், இதர பொருள்கள் 2 சதவீதத்திற்கு மிகாமலும், இதர தானியங்கள் கலப்பு 3 சதவீதத்திற்கு மிகாமலும், சேதமடைந்த பருப்புகள் 3 சதவீதத்திற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

Credit : Quora

  • சேதமடைந்த பருப்புகள் 4 சதவீதத்திற்கு மிகாமலும், முதிர்வடைந்த மற்றும் சுருங்கிய பருப்புகள் 3 சதவீதத்திற்கு மிகாமலும், வண்டுகள் தாக்கிய பருப்புகள் 4 சதவீதத்திற்கு மிகாமலும், ஈரப்பதம் 12 சதவீதத்திற்கு மிகாமலும் நிர்ணயிக்கப்பட்ட நியாயமான சராசரி தரங்களுடன் (FAQ) விருதுநகர் மற்றும் அருப்புக்கோட்டை ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் கிலோவுக்கு ரூ.60.00 என்ற குறைந்தபட்ச ஆதார விலையில் கொள்முதல் செய்யப்படவுள்ளது.

  • உளுந்திற்கான கொள்முதல் தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.

  • விருதுநகர் மாவட்டத்தில் வரும் 16-11-2020 வரை உளுந்து கொள்முதல் செய்யப்படவுள்ளது.

  • இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் உளுந்து விவசாயிகள் தங்களது நிலச்சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை,வங்கிக் கணக்கு புத்தக நகல் ஆகிய விவரங்களுடன் விருதுநகர் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளரை 9003753160, 04562 – 245038 என்ற எண்ணிற்கும், அருப்புக்கோட்டை ஒழுங்குமுறை விற்பனைக்கூட மேற்பார்வையாளரை 9626755153, 04566 – 220225 என்ற எண்ணிற்கும் தொடர்பு கொண்டு பதிவு செய்து பயன்பெறலாம்.


மேலும் படிக்க...

பாரம்பரிய காய்கறி சாகுடிபடிக்கு ரூ.15,000மானியம்- விவசாயிகளுக்கு அழைப்பு!

மிளகாய் வற்றலுக்கு ரூ.9000/- வரை கிடைக்கும்- TNAUவின் விலை முன்னறிவிப்பு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)