தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகள், பாசனத்திற்காக பி.வி.சி., பைப் மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தாட்கோ மானிய திட்டத்தில் பயன்பெறாத எஸ்.சி., எஸ்.டி., விவசாயிகளுக்கும், சிறு, குறு மற்றும் நடுத்தர விவசாயிகளுக்கும், துரித மின் இணைப்பு திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து, நிலுவையில் உள்ளவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும்.
இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
தமிழக அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை 'தாட்கோ' மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு பல்வேறு வேளாண் பணிகளுக்கு மானியம் வழங்கப்பட்டு வருகிறது.இதில் பி.வி.சி., பைப் வாங்க, 15 ஆயிரம் ரூபாய் மானியமாகவும், புதிய மின் மோட்டார் வாங்க, 10 ஆயிரம் ரூபாய் மானியமாகவும் வழங்கப்படுகிறது.
நிபந்தனை
-
இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் விண்ணப்பதாரர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சேர்ந்த விவசாயியாக இருக்க வேண்டும்.
-
குடும்ப ஆண்டு வருமானம், 2 லட்சம் ரூபாய்க்கு மேல் இருக்க கூடாது.
விவசாயத்தை தொழிலாகக் கொண்டவராக இருத்தல் அவசியம்.
-
தாட்கோ மானிய திட்டத்தில் பயன்பெறாத எஸ்.சி., எஸ்.டி.,விவசாயிகளுக்கும், சிறு, குறு மற்றும் நடுத்தர விவசாயிகளுக்கும், துரித மின் இணைப்பு திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து, நிலுவையில் உள்ளவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும்.
-
ஏற்கனவே தாட்கோ நிலம் வாங்கும் திட்டம், நில மேம்பாட்டு திட்டம் மற்றும் துரித மின் இணைப்பு திட்டம் ஆகிய திட்டங்களில், பயன் பெற்றிருந்தாலும் இத்திட்டத்தில் பயன்பெறலாம்.
இவர்களுக்குக் கிடைக்காது
PMKSY-SWMA திட்டத்தில் மின்மோட்டார் மானியம் பெற்றவர்கள், வேளாண், தோட்டக் கலைத்துறை திட்டங்களில் மின் மோட்டார் மானியம் பெற்றவர்கள், இத்திட்டத்தின் கீழ் மானியம் பெற வழிவகை இல்லை. கூடுதல் விபரங்களுக்கு, மாவட்ட மேலாளர், தாட்கோ, டாக்டர் பாலசுந்தரம் ரோடு, மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி பின்புறம், கோவை என்ற முகவரியிலும், 0422--2240111 என்ற எண்ணிலும் அணுகலாம். இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
எப்படி விண்ணப்பிப்பது?
விண்ணப்பதாரர் தங்களின் சாதி சான்று, வருமான சான்று, குடும்ப அட்டை, இருப்பிட சான்று, சிட்டா, பட்டா, அடங்கல், அ-பதிவேடு, புலப்பட வரைப்படம், அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட விலைப்புள்ளி ஆகியவற்றை தாட்கோ இணைதள முகவரியில், www.application.tahdco.com பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் படிக்க...