Farm Info

Saturday, 20 March 2021 10:40 AM , by: Elavarse Sivakumar

Credit : Features

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் சார்பில், நெல்லிக்காயில் இருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பது குறித்த 2 நாள் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

பல வகைப் பயிற்சிகள் (Many types of exercises)

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் சார்பில் விவசாயிகளுக்கு அவ்வப்போது காளான் வளர்ப்பு உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

2 நாள் பயிற்சி (2 day training)

இதன் ஒருபகுதியாக, வரும் 25 மற்றும் 26ம் தேதிகளில், நெல்லிக்காயில் இருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பது குறித்த பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

காலை முதல் மாலை வரை (From morning to evening)

இந்த இரண்டு நாட்களும் காலை 9.30 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை பயிற்சி நடைபெறும்.

பயிற்சியின் அம்சங்கள் (Features of training)

இதில்

  • நெல்லி பானங்கள்- பழசர பானம் மற்றும் தயார் நிலைபானம்

  • நெல்லி ஜாம்

  • தேன் நெல்லி, நெல்லி கேண்டி, நெல்லி மிட்டாய், பொடி மற்றும் துருவல்

  • தொழில் தொடங்குவதற்கான உரிமம் பெற்றுக் கொள்ளுவதற்குரிய வழிமுறைகள் ஆகியவை பயிற்றுவிக்கப்படுகின்றன.

பயிற்சிக் கட்டணம் (Fees)

ஆர்வமும், விருப்பமும் உள்ளவர்கள் ரூ.1,770யை பயிற்சிக்கான முதல் நாளில் செலுத்தி, பயிற்சியில் பங்கேற்றுப் பயனடையலாம்.

கூடுதல் விபரங்களுக்கு

பேராசிரியர் மற்றும் தலைவர்

அறுவடை பின்சார் தொழில்நுட்பம் மையம்

வேளாண்மைப் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்,

கோயமுத்தூர் - 641 003

என்ற முகவரியையும்,

0422-6611268 என்ற தொலைபேசி எண்ணையும் தொடர்பு கொள்ளலாம்.

மேலும் படிக்க...

கூடுதல் மகசூல் தரும் கலப்புப் பயிர் சாகுபடி!

கால்நடைத் தீவனப் பற்றாக்குறையைப் போக்கும் நேப்பியர் புல் சாகுபடி!

பொது இடங்களில் மாஸ்க் அணியாவிட்டால் அபராதம் - தமிழக அரசு உத்தரவு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)