Farm Info

Saturday, 27 November 2021 08:04 AM , by: Elavarse Sivakumar

Credit : Dinamalar

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்பட 12 கடலோர மாவட்டங்களுக்கு ரெட் அலேர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியதில் இருந்து பரவலாக மழை பெய்துவருகிறது. தெற்கு வங்கக் கடலில்நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் நேற்று விடிய விடிய மழை பெய்தது.

பருவமழை தீவிரம் (Intensity of monsoon)

இந்நிலையில் சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்துள்ளது. வடகிழக்குப் பருவமழை தற்போது தீவிரம் அடைந்துள்ளது.

27.11.21

மிக கன மழை (Very heavy rain)

குமரிக்கடல் மற்றும் அதை ஒட்டிய இலங்கை கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, 27-ந் தேதி (இன்று) சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.

கனமழை (Heavy rain)

கன்னியாகுமரி, ராமநாதபுரம், திருச்சி, கரூர், நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.


28.11.21

  • 28-ந் தேதி (நாளை) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

  • அரியலூர், திருச்சி, கரூர், மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

சிவப்பு எச்சரிக்கை (Red alert)

சென்னையைப் பொறுத்தவரை இன்று ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே பெய்த மழை, வரும் நாட்களில் பதிவாக உள்ள மழை மற்றும் பாதிப்புகளை கருத்தில்கொண்டு, கடலோர மாவட்டங்களுக்கு அடுத்த 2 நாட்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும் (ரெட் அலேர்ட்), அதை ஒட்டி யுள்ள மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடப்படுகிறது.

இதன்படி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் அதி கனமழை ( ரெட் அலர்ட்) அதாவது 20 செ.மீ வரை அல்லது அதற்கு மேல் மழை பெய்யும்.

குமரிக்கடல், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தென்தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். எனவே இந்த பகுதிகளுக்கு 27-ந் தேதி மீனவர்கள் செல்லவேண்டாம்.

காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி (Depression)

29-ந் தேதி தெற்கு அந்தமான் கடல்பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். இது அடுத்த 48 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று மேற்கு, வடமேற்கு திசையில் நகரக்கூடும். இதன் காரணமாக அந்தமான் கடல்பகுதிகளில் சூறவாளிக்காற்று 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும். இதனால் 29-ந் தேதி, 30-ந் தேதிகளில் அந்தமான் கடல்பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என்று மீனவர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வடகிழக்கு பருவமழையின் தீவிரத்தால் தமிழகத்தின் கடலோர மற்றும் உள் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், சேலம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் விடுமுறை அளித்துள்ளன.

பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

சென்னை
திருவள்ளூர்
காஞ்சிபுரம்
செங்கல்பட்டு
சேலம்
திருவண்ணாமலை
நாகப்பட்டினம்
புதுக்கோட்டை
தஞ்சாவூர்
திருநெல்வேலி
தூத்துக்குடி
அரியலூர்
திருச்சி
ராமநாதபுரம்
விழுப்புரம்
கடலூர்
பெரம்பலூர்
திருவாரூர்
ராணிப்பேட்டை
கள்ளக்குறிச்சி
வேலூர்
மயிலாடுதுறை

பள்ளிகளுக்கு மட்டும் 

திண்டுக்கல்
புதுச்சேரி
காரைக்கால்

மேலும் படிக்க...

4 நாட்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை!

உருவாகிறது 4-வது புயல் சின்னம் - தென் மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)