சென்னை உட்பட 8 மாவட்டங்களில் இன்றும், நாளையும், மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தொடரும் கனமழை (Continuing heavy rain)
தமிழகக் கடற்கரையை ஒட்டி 5.8 கிலோ மீட்டர் உயரத்திற்கு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக சென்னையில் நேற்று முதல் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால், தாழ்வானப் பகுதிகள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கி வெள்ளக்காடாகக் காட்சியளிக்கிறது.
இதன் காரணமாக மக்களின் இயல்புவாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
31.12.21
-
நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய அதி கன மழை பெய்யும்.
-
டெல்டா மாவட்டங்கள், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழை முதல் மிக கனமழை பெய்யக் கூடும்.
-
உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
01.01.2022
-
டெல்டா மாவட்டங்கள், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழை முதல் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
-
உள் மாவட்டங்களில் ஒரு சில இடக்ளில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
02.01.2022
-
கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
-
உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
03.01.2022
தென் தமிழ் நாட்டில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
04.01.2022
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இலேசான மழை பெய்யக்கூடும்.
சென்னை ( Chennai)
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணிநேரத்திற்கு பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் கன மழை முதல் மிக கன மழை பெய்யக்கூடும்.
வெப்பநிலை (Temperature)
-
அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸையும் ஒட்டி இருக்கும்.
-
கடந்த 24 மணிநேரத்தில் சென்னை டிஜிபி அலுவலகத்தில் 24 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை (Warning for fishermen)
31.12.21,01.01.22 வரை
குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு செல்லும் மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க....