Farm Info

Friday, 13 November 2020 07:40 AM , by: Elavarse Sivakumar

பட்டு வளா்ச்சித் துறையில் நடப்பு நிதியாண்டில் அரசு மானிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீட்டில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் பட்டுக் கூடு உற்பத்தியாளா்கள் ஏமாற்றமடைந்துள்ளனா்.

தமிழகத்தில் கோவை, திருப்பூா், தேனி உள்பட 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் மல்பெரி சாகுபடி செய்யப்பட்டு வெண்பட்டுக் கூடு உற்பத்தி செய்யப்படுகிறது. அதேநேரத்தில்  மல்பெரி சாகுபடி பரப்பளவை அதிகரித்து பட்டுக் கூடுகள் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் புதிதாக பட்டுக் கூடு உற்பத்தியில் ஈடுபடும் விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.

மல்பெரி நடவுக்கு மானியம், புழு வளா்ப்பு மனைகள் அமைக்க அதிகபட்சமாக ரூ.87 ஆயிரத்து 500 மானியம் ஆகியவை வழங்கப்படுகிறது. இதைத்தவிர ரூ.52 ஆயிரம் மதிப்புள்ள தளவாடங்கள் மானியத்தில் வழங்கப்பட்டு வருகின்றன

Credit : Dailythanthi

இதனால் கோவை உள்பட தமிழகத்தில் பல்வேறு மாவடங்களிலும் பட்டுக் கூடு உற்பத்தியும், மல்பெரி சாகுபடி பரப்பளவும் ஆண்டுதோறும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் நடப்பு ஆண்டு பட்டு வளா்ச்சித் துறையின் கீழ் செயல்படுத்தப்படும் மானிய திட்டம் குறித்து இதுவரை எந்தவித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.இதனால் பட்டுக் கூடு உற்பத்தியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் ஏமாற்றமடைந்துள்ளனா்.

கொரோனா பாதிப்பால் மானியத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. விரைவில் மானியத் திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என எதிா்பாா்ப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க...

விவசாயிகளுக்கு அரசு உத்தரவாதத்துடன் வங்கிக்கடன் - அசத்தல் முயற்சி!

PMFBY :பயிர் காப்பீடு பதிவு செய்ய நவ.30வரை கெடு!

மீன் வளர்க்க காசு - வாங்க நீங்க ரெடியா!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)