பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 8 January, 2022 11:18 AM IST
Large-scale cultivation of coffee

காபி விலை தற்போது வரலாறு காணாத உச்சத்தில் உள்ளது, ஆனால், இந்த பலனைப் இந்திய விவசாயிகள் பெறவில்லை. இந்தியாவில் இரண்டு வகையான காபி, ரோபஸ்டா மற்றும் அராபிகா ஆகியவை பயிரிடப்படுகின்றன என்பது சிறப்பாகும். தற்போது, ​​அராபிகா காபியின் விலை விண்ணைத் தொடுகிறது, மேலும் ரோபஸ்டா காபி இந்தியாவில் மிகப்பெரிய அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது என்பது குறிப்பிசதக்கது. விலைவாசி உயர்வின் பலன் விவசாயிகளுக்கு கிடைக்காததற்கு இதுவே காரணம்.

இந்தியாவில், தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களில் மட்டுமே காபி உற்பத்தி 83 சதவீதமாக உள்ளது. இதிலும் 70 சதவீத பங்கு கர்நாடகா என்ற ஒரு மாநிலத்திற்கு மட்டுமே உள்ளது. இம் மாநிலத்தின் குடகு மாவட்டம் காபி சாகுபடியின் மையமாக திகழ்கிறது. ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளாக கனமழை மற்றும் பருவமழை பெய்த்ததால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால், இந்த பணப்பயிர் விவசாயிகள் மத்தியில் கடும் ஆதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் ரோபஸ்டா காபி உற்பத்தி (Robusta coffee production in India)

அராபிகா சுவையாக இருப்பதால் சந்தையில் அதிக விலை கிடைக்கிறது. அரேபிகா சாகுபடிக்கு நவம்பர் முதல் ஜனவரி வரையிலும், ரோபஸ்டா சாகுபடிக்கு ஜனவரி முதல் மார்ச் வரையிலும் மிகவும் ஏற்ற காலமாகும். இந்தியாவின் மொத்த காபி உற்பத்தியில் 70 சதவீதம், ரோபஸ்டாவின் பங்கு உள்ளது. மகசூல் அதிகம் மற்றும் பராமரிப்பு செலவு குறைவு என்பதால் சிறு விவசாயிகள் ரோபஸ்டாவையே பயிரிட விரும்புகின்றனர்.

அரேபிகா காபிக்கான பொருட்களின் சந்தையை மேலோட்டமாகப் பார்த்தால், காபியின் விலை 2011 இல் 34 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்தது என்பதைக் குறிக்கிறது. இதற்கு முன்பு 1997, 1986 மற்றும் 1977 ஆம் ஆண்டுகளில் விலை உச்சத்தில் இருந்தது. காபி உலகளாவிய சந்தை, எனவே இந்தியாவில் உள்ள விவசாயிகள் பிரேசில், கொலம்பியா, வியட்நாம், இந்தோனேசியா, ஹோண்டுராஸ் மற்றும் எத்தியோப்பியா போன்ற நாடுகளில் உள்ள விவசாயிகளுடன் போட்டியிடுகின்றனர். உலகின் வேறு எந்தப் பகுதியிலும் விநியோகத் தட்டுப்பாடு ஏற்பட்டால், அது இந்திய விவசாயிகளுக்குப் பயனளிக்கும். இங்கு உற்பத்தி செய்யப்படும் காபியில் 80 சதவீதம் ஏற்றுமதி செய்யப்படுவதால், இந்திய காபி விவசாயிகள் வெளிநாட்டு சந்தைகளையே நம்பி உள்ளனர்.

அராபிகா காபிக்கான பொருட்களின் சந்தையை மேலோட்டமாகப் பார்த்தால், காபியின் விலை 2011 இல் 34 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்தது என்பதைக் குறிக்கிறது. இதற்கு முன்பு 1997, 1986 மற்றும் 1977 ஆம் ஆண்டுகளில் விலை உச்சத்தில் இருந்தது. காபி உலகளாவிய சந்தை, எனவே இந்தியாவில் உள்ள விவசாயிகள் பிரேசில், கொலம்பியா, வியட்நாம், இந்தோனேசியா, ஹோண்டுராஸ் மற்றும் எத்தியோப்பியா போன்ற நாடுகளில் உள்ள விவசாயிகளுடன் போட்டியிடுகின்றனர். உலகின் வேறு எந்தப் பகுதியிலும் விநியோகத் தட்டுப்பாடு ஏற்பட்டால், அது இந்திய விவசாயிகளுக்குப் பயனளிக்கும். இங்கு உற்பத்தி செய்யப்படும் காபியில் 80 சதவீதம் ஏற்றுமதி செய்யப்படுவதால், இந்திய காபி விவசாயிகள் வெளிநாட்டு சந்தைகளையே நம்பி உள்ளனர்.

ஒரு ஏக்கர் சாகுபடிக்கு 50 ஆயிரம் ரூபாய் செலவாகும் (Cultivation per acre costs 50 thousand rupees)

காபி சாகுபடிக்கான மொத்த செலவில் பெரும்பகுதி உரம், டீசல் மற்றும் தொழிலாளர்கள் கூலி என செலவிடப்படுகிறது. இதைப் பற்றி, ஒரு விவசாயிடம் கேட்டபோது, காபி விவசாயி கே.கே.விஸ்வநாத் கூறுகையில், ரோபஸ்டா காபிக்கு, ஒரு ஏக்கர் பண்ணையில் குறைந்தபட்சம் 35 ஆயிரம் ரூபாய் கூலி செலவாகிறது. அதே சமயம் டீசல் மற்றும் உரங்களுக்கு 15 ஆயிரம் ரூபாய் பயன்படுத்தப்படுகிறது. இப்படி ஒரு ஏக்கர் வயலில் ஒரு சீசனில் ரோபஸ்டா காபி சாகுபடிக்கு மொத்த செலவு 50 ஆயிரம் ரூபாய்.

பிரேசில் உலகின் மிகப்பெரிய காபி உற்பத்தியாளராக உள்ளது, அதே நேரத்தில் வியட்நாம் சமீபத்தில் உலகளவில் ரோபஸ்டா காபியின் மிகப்பெரிய உற்பத்தியாளராக உருவெடுத்துள்ளது. விஸ்வநாத் கூறுகையில், அங்குள்ள விவசாயிகள் திறந்த வெளியில் விவசாயம் செய்கின்றனர். காடுகளை அழிப்பதன் மூலம் இந்த நாடுகளில் காபி உற்பத்தி விரிவடைந்தது. மறுபுறம், இந்தியாவில் விவசாயிகள் நிழலில் வளர்க்கப்படும் காபியை பயிரிடுகிறார்கள், இது நிலையானது, ஆனால் குறைந்த வருமானத்தை அளிக்கிறது. கர்நாடகாவில் குடகு, சிக்மகளூர் மற்றும் ஹாசன் ஆகிய மூன்று மாவட்டங்களில் காபி பயிரிடப்படுகிறது என்பது குறிப்பிடதக்கது.

மேலும் படிக்க:

இந்த தொழில் தொடங்க, அரசு 85% மானியம் வழங்குகிறது

PF Account வைத்திருப்போருக்கு நற்ச்செய்தி: கணக்கில் வந்தது மிகப்பெரிய தொகை

English Summary: Rising coffee prices: Large-scale cultivation does not benefit India
Published on: 08 January 2022, 11:18 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now