வேளாண் சார்ந்த தொழில்கள் தொடங்க பட்டதாரி இளைஞர்களுக்கு 1 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படும் என தமிழக வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் இயற்கை வேளாண்மைப் பாதுகாக்க ரூ.500 கோடி ஒதுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் 2022-23-ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை தாக்கல் அத்துறைக்கான அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் தாக்கல் செய்துள்ளார். இதில் இடம்பெற்றுள்ள சிறப்பு அம்சங்கள்!
-
12 கோடி ரூபாயில் மரம் வளர்ப்பு திட்டம்
-
எண்ணெய் வித்து சாகுபடியை அதிகப்படுத்த 28 கோடி ரூபாய் ஒதுக்கீடு
-
ஆடு,மாடு, கோழி உளளிட்ட வேளாண் சார்ந்த தொழில்களை உஊக்கப்படுத்த 65 கோடி ரூபாய் ஒதுக்கீடு
-
2500 இளைஞர்களுக்கு விவசாய திறன் பயிற்சி
-
துவரை சாகுபடி சிறப்பு மண்டலங்கள் உருவாக்கப்படும்
-
சிறுதானிய உற்பத்தியை ஊக்கப்படுத்த இரண்டு சிறப்பு மண்டலங்கள்
-
வேளாண் சார்ந்த தொழில்கள் தொடங்க பட்டதாரி இளைஞர்களுக்கு 1 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படும்.
-
இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க ரூ. 400 கோடி நிதி
-
நெல்லுக்குப் பதிலாக சிறுதானியம் உள்ளிட்ட பயிர்களை பயிரிட 10 கோடி நிதி
-
மானியத்தில் வேளாண் கருவி வழங்க 15 கோடி ரூபாய் ஒதுக்கீடு
-
விவசாயிகளுக்கு தார்பாய் வழங்க நிதி
-
மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்திற்கு ரூ. 71 கோடி ஒதுக்கீடு
-
குறுவை சாகுபடியால் டெல்டா விவசாயிகளின் வருமானம் உயர்ந்துள்ளது. இது 46 ஆண்டுகளில் இல்லாத வரலாற்று சாதனை
-
காலநிலை மாற்றத்தை சமாளிக்கும் பயிர் வகைகள் குறித்து விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
மேலும் படிக்க...
பளபளக்கும் பப்பாளி-ஆண்மைத்தன்மையை பாதிக்கும்!
இவற்றைத் தவிர்க்காவிட்டால், உங்கள் எலும்புகள் பொடிப்பொடியாவது உறுதி!