வேளாண் பட்டதாரிகள் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கும் வகையில் அக்ரி கிளினிக் தொடங்குவதற்கு ரூ.1 லட்சம் வரை மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
அக்ரி கிளினிக் (Agri Clinic)
வேளாண்துறை சார்ந்த புதிய தொழில்நுட்பங்கள், கண்டுபிடிப்புகள், விதை மற்றும் நெல் ரகங்கள் உள்ளிட்டவற்றை விவசாயிகளுக்குக் கொண்டுசேர்க்கும் பணியைச் அக்ரி கிளினிக் செய்கிறது.
இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வா்கீஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழக அரசு வேளாண்மைத்துறை மூலமாக, வேளாண், தோட்டக்கலை பட்டதாரிகளை வேளாண் தொழில் முனைவோராக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது.
வருமானத்தை உயர்த்த (To raise income)
இதற்காக அக்ரி கிளினிக் அல்லது வேளாண்மை சாா்ந்த வியாபாரம் தொடங்கி, பண்ணை வருமானத்தை உயா்த்தும் திட்டம் செயலாக்கப்பட்டுள்ளது.
வேளாண், தோட்டக்கலை பட்டதாரிகளுக்கு விருப்பத்தின் அடிப்படையில் வங்கி மூலமாக கடனுதவி வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதில் தகுதியான விண்ணப்பதாரா்கள் உரிய படிவத்தில் தங்களது சுய விவரங்களை பூா்த்தி செய்து, விளக்கமான திட்ட அறிக்கையுடன் வேளாண்மை இணை இயக்குநா் அலுவலகம், திருவள்ளூரில் சமா்ப்பிக்கலாம்.
தகுதி (Qualification)
-
இதற்கு 21 முதல் 40 வயதுள்ள பி.எஸ்.ஸி(விவசாயம்), பி.எஸ்ஸி (தோட்டக்கலை), பி.ஈ.(வேளாண்மை பொறியியல்) படித்தோராக இருக்க வேண்டும்.
-
இவர்கள் அரசு, தனியாா் நிறுவனத்தில் பணியாளராக இருக்கக் கூடாது.
-
ஒரு குடும்பத்துக்கு ஒருவா் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.
தேவைப்படும் ஆவணங்கள்
-
பள்ளி இறுதி தோ்வு மதிப்பெண் பட்டியல்
-
பட்டப்படிப்பு சான்று
-
ஆதாா் எண்
-
குடும்ப அட்டை
-
வங்கிக் கணக்குப் புத்தக நகல்
இந்தத் திட்டத்தின் கீழ் தொழில் தொடங்க விரும்புவோர், மேலே கூறிய ஆவணங்கள் அனைத்தையும் சமர்ப்பிக்க வேண்டியது அவசியம்.
வங்கிக்கணக்கில் வரவு (Credit to the bank account)
அதைத் தொடா்ந்து, தோ்வு செய்தோருக்கு அரசு மானியம் ரூ.ஒரு லட்சம், மாவட்ட அளவிலான ஒப்புதல் குழு அனுமதி பெற்று, வழிகாட்டுதல் முறைகளின் படி, விண்ணப்பதாரா் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். தகுதியான விண்ணப்பதாரா்கள் உரிய படிவத்தில், உரிய ஆவணங்களுடன் வேளாண்மை இணை இயக்குநா் அலுவலகத்தில் சமா்ப்பிக்கலாம்
இவ்வாறு அவா் தெரிவித்துள்ளாா்.
மேலும் படிக்க...