Farm Info

Saturday, 22 January 2022 09:32 PM , by: Elavarse Sivakumar

விவசாயிகளுக்கு மின்மோட்டார் பம்பு செட்டுகள் அமைக்க மானியம் வழங்கப்படும் என்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்துள்ளார். மானியமாக ரூ.10,000 வழங்கப்படுவதால், விவசாயிகள் இந்தத் திட்டத்தைச் சரியாகப் பயன்படுத்திப் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பாசனமே  ஆதாரம் (Irrigation is the source)

நீரின்றி அமையாது உலகு என்றார் வள்ளுவர். அதேபோல நீரின்றி விவசாயமும் சாத்தியமில்லை. விவசாயத்தின் அடிப்படை ஆதாரமாகத் திகழும் இந்த நீரினை எடுக்க ஏதுவாக மின் மோட்டார் பம்பு செட்கள் அமைக்க அரசு சார்பில் விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது.

இது குறித்து, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

கிணறுகளிலிருந்து பாசனத்திற்கு நீரினை இறைப்பதற்காக விவசாயிகள் பயன்பெறும் வகையில் முதலமைச்சரின் தொலை நோக்கு திட்டத்தில் சில அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

ரூ.10 ஆயிரம் மானியம் (Rs 10 thousand grant)

இந்தத் திட்டங்களில் குறிப்பிட்டுள்ளபடி, மூன்று ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் சிறு, குறு விவசாயிகளுக்கு, பாசன நீரை இறைத்திட புதிய மின் மோட்டார் பம்பு செட்டுகள் வாங்க மானியம் வழங்கப்படுகிறது.
இதேபோல், திறன் குறைந்த பழைய மின் மோட்டார் பம்புச் செட்டுகளை மாற்றி புதிய மின் மோட்டார் பம்பு செட்டுகள் பொருத்தவும், விவசாயிகள் பயன் பெறும் வண்ணம் புதிய மின்மோட்டார் பம்பு செட்டுகள் வாங்குவதற்கு ஒரு மின்மோட்டார் பம்பு செட்டுக்கு ரூ.10 ஆயிரம் மானியம் வழங்கப்படும்.

தேவைப்படும் ஆவணங்கள் (Documents required)

  • சிறு,குறு விவசாயி சான்றிதழ்

  • அடங்கல்

  • கிணறு அமைந்துள்ள நிலவரை படம்

  • மின்சார இணைப்பு அட்டைவிபரம்

  • வங்கிப் புத்தகத்தின் முதல் பக்க நகல்

தொடர்புக்கு (Contact)

எனவே, இலுப்பூர் மற்றும் புதுக்கோட்டை வருவாய் கோட்டத்தின் பகுதியில் உள்ள விவசாயிகள், உதவி செயற்பொறியாளர் , வேளாண்மைப் பொறியியல் துறை, திருக்கோகர்ணம், புதுக்கோட்டை அலுவலகத்திலும், அறந்தாங்கி கோட் டத்தின் பகுதியில் உள்ள விவசாயிகள் உதவி செயற்பொறியாளர், வேளாண்மைப் பொறியியல்துறை, ராஜேந்திரபுரம், அறந்தாங்கி உபகோட்டத்திலும் மனுக்கள் அளித்து பதிவு செய்து பயன் பெற வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

திடீரென உயர்ந்த தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்!

கிசான் கால்சேன்டர், விவசாயம் தொடர்பான சந்தேகங்களை தீர்க்க! முயற்சி

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)