Farm Info

Sunday, 20 June 2021 07:57 AM , by: Elavarse Sivakumar

தமிழகத்தில் உள்ள 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலம் ரூ.11,500 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலியில் கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி செய்தியாளர்களிடையே பேசியபோது கூறியதாவது:

பயிர்க்கடன் (Crop loan)

தற்போது சாகுபடி நடைபெற்று வரும் நிலையில் சிறு, குறு விவசாயிகள், புதிய உறுப்பினர்களுக்கு பயிர்க் கடன் வழங்க வேண்டும்.

ரூ.11,500 கோடி கடன் இலக்கு (Rs 11,500 crore loan target)

தமிழகத்தில் உள்ள 4,451 வேளாண்மை கூட்டுறவு தொடக்க சங்கங்கள் மூலம் ரூ.11,500 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

உரம் கையிருப்பு (Fertilizer stock)

தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் போதுமான அளவு உரம் இருப்பு வைக்க வேண்டும்.

தகுதிக்கு ஏற்பக் கடன் (Eligibility Credit)

சிறு வணிகர்கள், மாற்றுத் திறனாளிகள், தெருவோர வியாபாரிகள், பொதுமக்களுக்குத் தகுதிக்கு ஏற்ப அனைத்து கடன்களையும் வழங்க வேண்டும்.

சேமிப்பு கிடங்கு (Storage warehouse)

விவசாயிகளுக்கு அவர்களது விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைக்கவும், விளை பொருள்களைப் பாதுகாக்கக் குளிர்பதன வசதியுடன் கிட்டங்கி அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

உறுதி செய்வது அவசியம் (Confirmation is essential)

நியாயவிலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருள்களை எடை குறைவில்லாமலும், தரமான அரிசி வழங்குவதையும் கண்காணிப்பு அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும்.

கடும் நடவடிக்கை (Heavy action)

முறைகேடுகளில் ஈடுபடும் நியாயவிலைக் கடை விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் படிக்க...

இயற்கை விவசாயத்திற்கு கைகொடுக்கும் மண்புழு உரம்: அதிக செலவில்லாமல் தயாரிப்பது எப்படி?

மண் புழுக்களின் பங்களிப்பு: உள்ளீடுகள் மற்றும் நுட்பங்கள்

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)