சேலம் மாவட்டத்தில் தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்ற விவசாயிகளுக்கு தலா ரூ.13,500 ரூபாய் மானியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத்திட்டத்திற்காக மொத்தம் ரூ. 1.17 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் 2022-2023 ஆம் நிதியாண்டில் தேசிய வேளாண் வளா்ச்சி திட்டத்தின் கீழ் தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்ற விவசாயிகளுக்கு மானியம் வழங்குவதற்கான 800 ஹெக்டோ் இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டு ரூ. 1.17 கோடி மானியம் வழங்கப்படுகிறது.
ரூ.13,500
தரிசாக இருக்கும் நிலங்களில் உள்ள முள்புதா்களை அகற்றவும், அவற்றை சாகுபடிக்கு கொண்டு வந்து சிறுதானியங்கள், பயறுவகைகள், விதைத்து அதை விளை நிலங்களாக மாற்ற ஒரு ஹெக்டருக்கு ரூ.13,500 மானியமும், நிலக்கடலை பயிருக்கு ரூ.22,900 மானியமும் வழங்கப்படுகிறது.
மானியம்
தரிசு நிலங்களில் உள்ள முள்புதா்களை அகற்றுவதற்கும், நிலத்தை சமன் செய்வதற்கும், உழவுப் பணி மேற்கொள்வதற்கும் விதைகள், உயிா் உரங்கள், நுண்ணூட்ட கலவைகளுக்கும் மானியம் வழங்கப்படுகிறது. இத் திட்டம் தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்றும் விவசாயிகளுக்கு ஒரு நல்ல திட்டமாகும்.
சாகுபடி மேற்கொள்ளப்படாமல் பயன்பாடற்று கிடக்கும் தங்கள் நிலங்களை சாகுபடிக்கு கொண்டுவர விவசாயிகள் தங்கள் பகுதி வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களை அணுகி முன்னுரிமை பதிவேட்டில் பதிவு செய்து பயன்பெற வேண்டும் என சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
செரிமானத்தை மேம்படுத்த இந்த உணவுகள் போதும்!
ஹோட்டல் நிகழ்ச்சியில் இளம் பெண்களுக்கு பானம் இலவசம் - வித்தியாசமான விளம்பரம்!