Farm Info

Tuesday, 30 August 2022 06:55 PM , by: Elavarse Sivakumar

விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படும் என இந்த மாநில அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு விவசாயிகளுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இத்துடன்,மஞ்சள் குடும்ப அட்டைதாரர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டம், வழங்கப்படும் 70 முதல் 80 வயது வரையிலான முதியோர்களுக்கு உதவித்தொகை ரூ.500 உயர்த்தி வழங்கப்படும் என்பன உள்ளிட்ட அறிவிப்புகளும் வெளியிடப்பட்டுள்ளன.

ரூ.13 கோடி கடன்

புதுச்சேரியில் பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று முதலமைச்சர் ரங்கசாமி பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் முக்கியமானது,  புதுச்சேரியில் விவசாயிகள் வாங்கிய ரூ.13 கோடி கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பு.

ரூ.1000

மஞ்சள் குடும்ப அட்டைதாரர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டம் வழங்கப்படும். மரபணு குறைபாடுகள் உள்ள குழந்தைகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும். புதிய சட்டமன்ற கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஆட்டோ நல வாரியம் அமைக்கப்படும்.

உயர்த்தப்படும் உதவித்தொகை

70 முதல் 80 வயது வரையிலான முதியோர்களுக்கு உதவித்தொகை ரூ.500 உயர்த்தி வழங்கப்படும். துப்புரவு பணியாளர்கள் இனி தூய்மை பணியாளர்கள் என்று அழைக்கப்படுவர். இவ்வாறு ரங்கசாமி பேசினார்.

மேலும் படிக்க...

தியாகிகள் ஓய்வூதியம் ரூ.1,000 உயர்வு!

உடல் எடையை குறைக்க உதவும் சூப்பர் விதைகள்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)