நீர் பாசனத்துக்கு குழாய்கள் வாங்குவதற்காக விவசாயிகளுக்கு தலா ரூ.15.000 மானியம் வழங்கப்படுவதாக ஆதிதிராவிடர் நலத் துறை அறிவித்துள்ளது.
அரசு முடிவு (Government decision)
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளின் மேம்பாட்டிற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக விவசாயிகள் நிலமேம்பாட்டுக்குக்காக ஆழ்துளைக் கிணறு மற்றும் திறந்தவெளி கிணறுகள் மூலம் நீர்ப் பாசனத்துக்குப் பயன்படுத்த புதிய மோட்டார் வாங்குவதற்கு மானியம் வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
மானியம் (Subsidy)
இதன்படி 2,000 விவசாயிகளுக்குத் மானியம் வழங்குவதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இதனைத்தொடர்ந்து, குழாய்கள் வாங்குவதற்கான மானிய அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் க.மணிவாசன் வெளியிட்ட அரசாணையில், தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
விவசாயிகள் தேர்வு (Farmers select)
1,300 ஆதிதிராவிடர் மற்றும் 700 பழங்குடியின விவசாயிகள் தேர்வு செய்யப்படுவர். இவர்கள், தங்கள் வேளாண் நிலத்தில் நீர்ப் பாசனத்துக்குப் பயன்படுத்தும் குழாய்கள் வாங்குவதற்காக தலா ரூ.15,000 மானியம் வழங்கப்படுகிறது. அதற்காக ரூ.3 கோடி நிதி விடுவிக்கப்படுகிறது.
நிதிப் பங்களிப்பு (Financial contribution)
இதில், ரூ.1.30 கோடி செலவினம் மத்திய அரசு நிதியிலிருந்தும், ரூ.1.70 கோடி செலவினம் மாநில அரசு நிதியிலிருந்தும் வழங்கப்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
கோமாரி நோய்த் தாக்குதலால் அடுத்தடுத்து 200 மாடுகள் உயிரிழந்த பரிதாபம்!
கால்நடைகளுக்கான கோமாரி தடுப்பூசி தட்டுப்பாடு: இறப்பு எண்ணிக்கை அதிகரிப்பு!