Farm Info

Saturday, 03 October 2020 09:24 AM , by: Elavarse Sivakumar

தேனி மாவட்டத்தில் எந்திரம் மூலம் நெல் நடவு செய்தால், விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ2 ஆயிரம் மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் உத்தமபாளையம், ராமசாமி நாயக்கன் பட்டி, கோகிலாபுரம், ராயப்பன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில், முதல்போக நெல் நடவுக்கான ஆயத்தப் பணிகளில் விவசாயிகள் ஆர்வமுடன் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்காக நாற்றங்கால் தயாராகி ஒரு சில இடங்களில் நெல் நாற்று நடவு பணிகள் தொடங்கப்பட்டுவிட்டன.

ரூ.2 ஆயிரம் மானியம் (Rs.2000 Subsidy)

இதுதொடர்பாக உத்தமபாளையம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சுந்தரமகாலிங்கம் கூறுகையில், எந்திரம் மூலம் நெல் நடவு பணி செய்வதால் அதிகளவில் விளைச்சல் கிடைக்கும் என்றார்.

இடைவெளி விடுவதால் பயிருக்கு தேவையான சத்துக்கள் கிடைப்பதற்கு வசதியாக இருக்கும் என்று குறிப்பிட்ட அவர், எந்திரம் மூலம் நெல் நடவு பணி செய்தால் ஒரு ஏக்கருக்கு ரூ 2 ஆயிரம் வரை மானியம் வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

எனவே விவசாயிகள் எந்திர நடவுக்கு மாறுவதற்கு வேளாண்மை அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளலாம்.

மேலும் படிக்க...

கரியைக் காசாக்க நீங்க ரெடியா? 2 லட்சம் வரை சம்பாதிக்க டிப்ஸ்!

இயற்கை முறையில் கத்திரி பயிரிடும் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ. 3750 மானியம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)