பழங்கள், காய்கறிகள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு 20,000 ரூபாய் மானியமாக வழங்கப்படும் திட்டம் நடைமுறையில் இருப்பதால், விண்ணப்பித்துப் பயனடையுமாறு, வேளாண்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
உழவர்சந்தை
தென்காசியின் குத்துக்கல்வலசை கிராமத்தில் விவசாயிகள் மற்றும் நுகர்வோர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க ஏதுவாக உழவர்சந்தை விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
முகாமில் தகவல்
இதில், தென்காசி உழவர்சந்தை நிர்வாக அலுவலர் ராமச்சந்திரன் பங்கேற்று, அரசின் மானியத்திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார். வேளாண்மை வணிகத்திட்டங்கள் பி.எம். கிசான் திட்டங்கள் பற்றியும் விளக்கிக் கூறினார்.அப்போது விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.20ஆயிரம் மானியமாக வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.
இந்த முகாமில் உழவர் சந்தையின் பயன்கள் செயல்பாடுகள் பற்றியும், அடையாள அட்டை பெறும் வழிமுறைகள் பற்றியும், விவசாயிகளுக்கு கடைகள் ஒதுக்கீடு செய்தல், உழவர்சந்தை விவசாயிகள் காய்கறிகள் மற்றும் பழங்கள் சாகுபடி செய்து உழவர்சந்தையில் கொண்டுவந்து விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
உழவர்சந்தை விவசாயிகளுக்கு காய்கறிகள் மற்றும் பழங்களுக்கு விலை நிர்ணயம் செய்யும் முறை பற்றி தென்காசி உழவர்சந்தை உதவி நிர்வாக அலுவலர் கணேசன் எடுத்துரைத்தார். தென்காசி தோட்டக்கலை உதவி அலுவலர் பாலு தோட்டக்கலைத்துறை மானியத்திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் பற்றி விளக்கிக்கூறினார்.
மேலும் படிக்க...