மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 4 July, 2021 9:14 PM IST
Credit : Daily Thandhi

நுண்ணீர் பாசனம் அமைக்க ரூ.21¾ கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கரூர் மாவட்ட ஆட்சியர் கூறினார். இதன் மூலம், விவசாயிகள் பாசன வசதிக்கு மானியம் பெற முடியும்.

ஆய்வு

குளித்தலை மற்றும் தோகைமலை ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட கே.பேட்டை, சத்தியமங்கலம், பனிக்கம்பட்டி, இனுங்கூர் உள்ளிட்ட பகுதிகளில் வேளாண்மைத்துறையின் மூலம் விவசாயிகளுக்கு செயல்படுத்தப்பட்டு வரும் அரசின் நலத்திட்டங்கள் குறித்தும், அதன் பயன்பாடுகள் குறித்தும் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் (Prabhu Sankar) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

100% மானியம்

கரூர் மாவட்டத்தில் காவிரி, அமராவதி பாசன பகுதிகள் தவிர பிற பகுதிகள் மானாவாரி மற்றும் தோட்டக்கால் பகுதியாகும். தமிழ்நாட்டில் தான் 5 ஏக்கருக்குள் நிலம் இருக்கும் சிறுகுறு விசாயிகளுக்கு நுண்ணீர் பாசனம் அமைக்க 100 சதவீதம் மானியம் (100% Subsidy) வழங்கப்பட்டு வருகிறது. ஏனைய விவசாயிகளுக்கு 12.5 ஏக்கர் வரை நுண்ணீர் பாசனம் அமைக்க 75 சதவீதம் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. இதில் கரும்பு பயிருக்கு (Sugarcane Crop) கூடுதலாக திறந்த வெளிகிணறு மூலம் நிலத்திற்கு மேல் பரப்பில் நுண்ணீர் பாசனம் அமைக்க எக்டருக்கு ரூ.38,235-ம், நிலத்திற்கு உள்பகுதியில் நுண்ணீர்பாசனம் அமைக்க ரூ.49,758-ம், ஆழ்குழாய் கிணறு மூலம் நிலத்திற்கு மேற்பரப்பில் நுண்ணீர்பாசனம் அமைக்க ரூ.24,711-ம், நிலத்திற்கு உள்ளே அமைக்க ரூ.36,234-ம் வழங்கப்படுகிறது

கரூர் மாவட்டத்தில் வேளாண்மைத்துறையின் மூலம் நடப்பு நிதியாண்டிற்கு 1,350 எக்டேரில் நுண்ணீர் பாசனம் அமைத்திட, ரூ.6.45 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல, தோட்டக்கலைத்துறையின் (Horticulture) மூலம் 2,500 எக்டேர் பரப்பளவில் சொட்டுநீர் மற்றும் தெளிப்புநீர் பாசனம் அமைக்க ரூ.15 கோடி இலக்கீடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மொத்தம் சொட்டுநீர் மற்றும் தெளிப்புநீர் பாசனம் அமைக்க 3,850 எக்டேருக்கு ரூ.21 கோடியே 45 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

மேலும் படிக்க

உவர் மற்றும் களர் நிலங்களை சீராக்கும் பசுந்தாள் உரங்கள்!

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்திற்கு வாசனைப்பயிர்களின் மேம்பாட்டிற்காக தலைச்சிறந்த செயல்பாட்டு மைய விருது!

English Summary: Rs 210 crore allocated for micro-irrigation in Karur district
Published on: 04 July 2021, 09:14 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now