Farm Info

Friday, 18 February 2022 10:04 PM , by: Elavarse Sivakumar

தென்னந்தோப்புக்குள் ஸ்பிரிங்ளர் அமைக்க மானியமாக அதிகபட்சமாக ரூ.23,500 வழங்கப்பட உள்ளதால், விவசாயிகள் தவறாது பயன்படுத்திக் கொள்ளுமாறு, வேளாண்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல், பொள்ளாச்சி விவசாயிகள், தென்னைக்கு நன்மை பயக்கும் ஊடுபயிர்கள் சாகுபடி செய்து இரட்டை நன்மை பெறலாம், என, தோட்டக்கலை துறை தெரிவித்துள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில், தென்னை சாகுபடி அதிகளவில் நடக்கிறது. கூடுதல் வருவாய் மற்றும் பல்வேறு நன்மைகள் பெற, ஊடுபயிர் சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர். வாழை, கோகோ மற்றும் ஜாதிக்காய் அதிகளவில் ஊடுபயிராக சாகுபடி செய்யப்படுகிறது.
இவற்றைத்தவிர, தென்னைக்கு நன்மை தரும் மாற்று ஊடுபயிர்களை சாகுபடி செய்ய முயற்சிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தெற்கு தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் சவுமியா கூறியதாவது:

அதிகபட்ச மானியம்

தென்னைக்குள் அனைத்து வகையான கீரைகளையும் பயிரிடலாம். கீரைகள் தோப்பு நிழலில் செழித்து வளரும். ஈரப்பதம், பாசனம் அதிகம் தேவைப்படும் என்பதால், 'ஸ்பிரிங்ளர்' அமைத்துக் கொள்ளலாம்.ஸ்பிரிங்ளர்' அமைக்க, சிறு, குறு விவசாயிகளுக்கு, 100 சதவீத மானியம் தோட்டக்கலை துறை வாயிலாக அளிக்கப்படுகிறது.

63 எம்.எம் ஸ்பிரிங்ளர் அமைக்க, ஹெக்டேருக்கு, 21,000 ரூபாயும், 75 எம்.எம். ஸ்பிரிங்ளர் அமைக்க ஹெக்டேருக்கு, 23,500 ரூபாயும் மானியமாக பெறலாம்.

கீரை சாகுபடி வாயிலாக, தினமும் வருவாய் ஈட்டலாம்.அதே போல், தென்னந்தோப்புக்குள் கொத்தவரை, பொறியல் தட்டை சாகுபடி செய்தால், அவற்றின் வேர்கள் நைட்ரஜனை உறிஞ்சி தக்க வைத்து, தென்னைக்கு உரமாக அளிக்கின்றன. அறுவடை முடிந்த பின், செடிகளை உழுது மக்க வைப்பதால் கூடுதல் தழைச்சத்தும் கிடைக்கிறது. இந்த ஊடுபயிர்கள் வாயிலாக, கூடுதல் வருவாய் ஈட்ட முடிவதுடன், தென்னைக்கான உரச்செலவும் கணிசமாக குறைகிறது.

இந்த வகை பயிர்களுக்கும் மானியம் பெற்று 'ஸ்பிரிங்ளர்' அமைக்கலாம்.
மேலும், தென்னந்தோப்புக்குள் 'ஸ்பிரிங்ளர்' அமைப்பதால், தோப்பின் தட்பவெப்பம் மாறும். ஈரப்பதம், குளிர்ச்சி அதிகரித்து, மரங்களின் ஆரோக்கியமும், விளைச்சலும் அதிகரிக்கும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க...

இனிமேல் வார சம்பளம்! ஊழியர்களுக்கு உச்சக்கட்ட மகிழ்ச்சி!!

அச்சதலான 10 அடி தோசை - சாப்பிட்டால் ரூ.71,000 பரிசு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)