பொள்ளாச்சி தெற்கு வட்டார வேளாண் துறை சார்பில், சொட்டுநீர் பாசனம் அமைக்க மானியமாக, 3.86 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சொட்டுநீர் பாசனம் அமைக்கும் நிறுவனங்களை விவசாயிகளே தேர்வு செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சிறு-குறு விவசாயிகளுக்கு 100% மானியம்
கோவே மாவட்டம் பொள்ளாச்சி தெற்கு வட்டார வேளாண் துறையில், சொட்டுநீர் பாசன திட்ட மானியமாக, 3.86 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அரசு வேளாண் உற்பத்தியை பெருக்கவும், பாசன நீரை சேமிக்கவும் சொட்டுநீர் பாசன மானியத்திட்டம் செயல்படுத்துகிறது. இதில், சிறு, குறு விவசாயிகள், 100 சதவீதமும், இதர விவசாயிகள், 75 சதவீதமும் மானியம் பெறலாம்.
ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக, ஐந்து ஹெக்டேர் வரை மானியம் வழங்கப்படுகிறது. ஏற்கனவே, மானியத்தில் சொட்டுநீர் பாசனம் அமைத்து, ஏழு ஆண்டுகள் கடந்திருந்தால், மீண்டும் மானியம் பெறலாம். குத்தகை நிலமாக இருப்பின், ஏழு ஆண்டுகளுக்கு சட்டப்படி குத்தகை பத்திரம் பதிந்திருந்தால், மானியம் பெறலாம்.
விண்ணப்பிப்பது எப்படி?
இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள், www.tnhorticulture.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்யும் போது, தங்களுக்கு விருப்பமான சொட்டுநீர் பாசனம் அமைக்கும் நிறுவனத்தை அவர்களே தேர்வு செய்து கொள்ளலாம்.
தொட்டி கட்டுதல் திட்டம்
மேலும், துணை நீர் மேலாண்மை திட்டத்தின் கீழ், தொட்டி கட்டுதல், மின்மோட்டார் வாங்கவும் மானியம் பெறலாம். இத்திட்டம் தொடர்பாக மேலும் தகவல் பெற, தெற்கு வட்டார உதவி வேளாண் அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம். உதவி வேளாண் அலுவலர்கள், தொடர்பு எண்கள் வருமாறு: கந்தசாமி - 98429 71591; சண்முகம் - 95006 22248; செல்வம் - 80723 82408; ஆனந்தபாபு - 76676 76077; செல்வராணி - 99947 00883; சரண்யா - 89408 92983.இத்தகவலை, தெற்கு வேளாண் உதவி இயக்குனர் நாகபசுபதி தெரிவித்தார்.
மேலும் படிக்க...
90% மானியத்தில் வெள்ளாடு, செம்மறி ஆடு பெற விண்ணப்பிக்கலாம் - விவரம் உள்ளே!!
தமிழக சட்டப்பேரவையில் நாளை இடைக்கால பட்ஜெட் - ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார்!!