ஸ்மார்ட் போன் என்பது தற்போது நம்முடைய அன்றாட வாழ்க்கையின் அங்கமாக மாறிவிட்டது. நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்ல, அனைத்துத் தரப்பு மக்களுமே, தங்கள் கையில் ஸ்மார்ட் போன் வைத்திருப்பதைத் தனி கவுரவமாகக் கருதுகின்றனர். அதனால், எவ்வளவு விலை கொடுத்தும், ஸ்மார்ட் போனை வாங்க முன்வருகின்றனர்.
ஏனெனில், இந்த ஸ்மார்ட் போன் மூலமே, நம்முடைய வங்கிக் கணக்கில் பணப்பரிவர்த்தனை, உள்ளிட்ட பலவற்றை செய்ய வேண்டிய நிலை உருவாகியுள்ளது. அந்த வகையில், விவசாயிகளுக்கும், வானிலை அறிவிப்பு முதல் பல்வேறுத் தகவல்களைத் தெரிந்துகொள்ள, ஸ்மார்ட்போன் அவசியமான ஒன்றாகத் திகழ்கிறது. இதனைக் கருத்தில்கொண்டு, விவசாயிகள் ஸ்மார்ட்போன் வாங்குவதற்கு ஏதுவாக குஜராத் மாநில அரசு சார்பாக மானிய உதவி வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்தத்திட்டத்தை அம்மாநில முதல்வர் பூபேந்திர படேல் தொடங்கினார்.
இதன்படி கடந்த வாரத்தில் விவசாயிகள் பலருக்கு மானிய உதவி வழங்கப்பட்டது. மத்திய மோடி அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தை மையமாக வைத்து விவசாயிகளுக்கான ஸ்மார்ட்போன் திட்டம் அங்கு செயல்படுத்தப்படுகிறது.
குஜராத் மாநிலம் காந்திநகரில் விவசாயிகளுக்கான ஸ்மார்ட்போன் மானியத் தொகையாக ரூ.1.84 லட்சம் கோடி வழங்கப்பட்டது. விவசாயிகளுக்கான ஸ்மார்ட்போன் திட்டத்தின் கீழ் இதுவரை விவசாயிகளிடமிருந்து 40,000க்கும் மேற்பட்ட விண்ணப்பம் வேளாண் துறை சார்பில் பெறப்பட்டுள்ளன. ஸ்மார்ட்போன் வழங்கும் திட்டத்துக்காக அரசு தரப்பிலிருந்து ரூ.15 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
ரூ.6,000
விவசாயிகளுக்கான ஸ்மார்ட்போன் மானியத் திட்டத்தின் கீழ் ஸ்மார்ட்போன் விலையில் 40 சதவீதம் மானியமாக வழங்கப்படுகிறது. அதிகபட்சமாக ரூ.6,000 வரை மானியம் கிடைக்கும். விவசாயிகள் ரூ.15,000 வரையிலான விலைகொண்ட ஸ்மார்ட்போன்களை வாங்கிக்கொள்ளலாம்.
விவசாயிகளுக்கு வேளாண்மை தொடர்பான தகவல்களைத் தெரிந்துகொள்ளவும், சந்தை வாய்ப்பை அதிகப்படுத்தவும், வேளான் பொருட்களை விற்பனை செய்யவும் ஸ்மார்ட்போன்கள் உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க...
தொழில் அதிபராக வேண்டுமா?அரிய வாய்ப்பை அளிக்கிறது Myrada KVK!