மதுரை மாவட்டத்தில், விவசாயிகள் ஒருங்கிணைந்த பண்ணையம் அமைத்து விவசாயம் செய்ய ஏதுவாக 100 ஹெக்டேருக்கு ரூ.60 லட்சம் வரை மானியம் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மானியம் (Subsidy)
மத்திய அரசின் ஒருங்கிணைந்த பண்ணையம் திட்டத்தின் கீழ் மதுரை மாவட்டத்தில் நான்கு வட்டாரங்களில் உள்ள விவசாயிகள் ஒருங்கிணைந்த பண்ணையம் அமைக்க மானியம் வழங்கப்படுகிறது.
2020 - 21 ஆண்டில் இத்திட்டத்தின் கீழ் மேலுார், உசிலம்பட்டி, டி.கல்லுப்பட்டி மற்றும் கள்ளிக்குடியில் ஒருங்கிணைந்த பண்ணையம் அமைக்க 100 எக்டேருக்கு ரூ.60 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது.
2 ஏக்கரில் பண்ணை (Farm on 2 acres)
குறைந்தபட்சம் விவசாயிக்கு தலா 2 ஏக்கரில் பண்ணையம் அமைக்க ரூ.6 லட்சம் பெறலாம்.
-
நெல் போன்ற விவசாயப் பயிர்களுடன் கால்நடை வளர்ப்பு, தோட்டக்கலை மற்றும் வனத்துறை பயிர்கள் வளர்ப்பை மேற்கொள்ளலாம்.
-
கால்நடை வளர்ப்பில் ஆடு, மாடு, கோழி மற்றும் தேனீ வளர்க்கலாம்.
-
தோட்டக்கலையில் பழ மரக்கன்றுகள் வழங்கப்படும்.
-
வனப் பயிர்களில் தேக்கு, வாகை போன்ற மரக்கன்றும் வழங்கப்படும்.
-
அனைத்திற்கும் சேர்த்து ரூ.6 லட்சம் மானியமாக தரப்படுகிறது.
எனவே விவசாய நிலத்தில் இதுபோல ஒருங்கிணைந்த பண்ணையம் அமைக்க விரும்பும் விவசாயிகள் அந்தந்த வட்டார வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம்.
மேலும் படிக்க...
ஆதார விலையில் துவரை கொள்முதல் - கரூர் விவசாயிகளுக்கு அழைப்பு!
வேலி ஓரங்களில் எந்த மரக்கன்று நடலாம்?
பட்டுப்புழு வளர்ப்பு மனை அமைக்க- ரூ.82,000 வரை மானியம்!