Farm Info

Tuesday, 11 October 2022 07:45 AM , by: Elavarse Sivakumar

பிஎம் கிசான் தவணைத் தொகை பயனாளிகள் பட்டியலில் தங்களுடைய பெயர் இடம்பெற்றிருக்கிறதா? என்பதே விவசாயிகளின் தற்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது. அதனைத் தெரிந்துகொள்ள இதை செய்தால் போதும்.

பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 2000 ரூபாய் விரைவில் வெளியாகப்போகிறது. இந்தப் பணம் பெறுவதற்கான பயனாளிகள் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை எப்படி தெரிந்துகொள்வது? ஆன்லைனிலேயே எளிமையாகத் தெரிந்துகொள்ளலாம்.

ரூ.6,000

பிரதமர் கிசான் சம்மன் நிதி திட்டம் (PM Kisan Samman Nidhi Yojana) 2019ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் விவசாயக் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 6000 ரூபாய் நிதி உதவியாக வழங்கப்படுகிறது. 2000 ரூபாய் என மூன்று தவணைகளாக பிரித்து இத்தொகை செலுத்தப்படும்.

மேலும் இத்தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்கே நேரடியாக செலுத்தப்பட்டுவிடும். இதுவரை மொத்தம் 11 தவணைகள் விவசாயிகளுக்கு செலுத்தப்பட்டுள்ளது. கடைசியாக மே 30ஆம் தேதி 11ஆவது தவணை செலுத்தப்பட்டது.

4 மாதங்கள்

நான்கு மாதங்களுக்கு ஒருமுறை பிரதமர் கிசான் தவணை தொகை 2000 ரூபாய் விவசாயிகளுக்கு செலுத்தப்பட்டு வரும் நிலையில், மிக விரைவில் 12ஆவது தவணை தொகையும் 2000 ரூபாய் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் அடுத்த வாரம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் விவசாயிகளுக்கு இத்தொகை உதவியாக இருக்கும். எனவே தீபாவளிக்கு முன்பாக பணம் செலுத்தப்பட்டுவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தெரிந்துகொள்வது எப்படி?

  • PM-kisan அதிகாரபூர்வ இணையதளத்துக்கு செல்லவும்.

  • அதில் உள்ள Farmers Corner பகுதிக்கு செல்லவும்.

  • அதில் Beneficiaries List கிளிக் செய்யவும்.

  • மாநிலம், மாவட்டம், தாலுக்கா, கிராமம் ஆகியவற்றை தேர்வு செய்யவும்.

  • Get Report கிளிக் செய்யவும்.


மேலும் படிக்க...

PM-kisan 12-வது தவணைத் தொகை- விவசாயிகளுக்கு இந்த தேதியில் வருகிறது!

மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிக்கிறது அடுத்த ஜாக்பாட்- உயருகிறது HRA!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)