ரூ.20000 பயிர்களுக்கு இழப்பீடு|PM Kisan அப்டேட்| உளுந்து விவசாயிகளுக்கு 50% மானியத்தில் விதை வழங்கல்
தமிழ்நாட்டில் காவிரி டெல்டா பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா பயிர்கள் பருவம் தவறி பெய்த மழையின் காரணமாக நீரில் மூழ்கி பெரும் சேதம் அடைந்தது. குறிப்பாக தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களில் மட்டும் சுமார் 1 லட்சம் ஹெக்டேர் பரப்பிலான பயிர்கள் நீரில் மூழ்கியதால் நெற்பயிர்களில் ஈரப்பதம் அதிகமாகி விட்டது.
தமிழ்நாட்டில் காவிரி டெல்டா பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா பயிர்கள் பருவம் தவறி பெய்த மழையின் காரணமாக நீரில் மூழ்கி பெரும் சேதம் அடைந்தது. குறிப்பாக தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களில் மட்டும் சுமார் 1 லட்சம் ஹெக்டேர் பரப்பிலான பயிர்கள் நீரில் மூழ்கியதால் நெற்பயிர்களில் ஈரப்பதம் அதிகமாகி விட்டது.
இதனால் விவசாயிகள் கடும் பாதிப்படைந்தனர். ஆங்காங்கே போராட்டத்திலும் ஈடுபட்டனர். எனவே, பயிர் சேதம் குறித்து ஆய்வு செய்ய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழுவை முதல்வர் மு.க.ஸ்டாலின் நியமித்தார். பேரிடர் மேலாண்மை விதிமுறைகளின்படி, 33 சதவிகிதம் மற்றும் அதற்குமேல் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ள இனங்களில் எக்டேருக்கு ரூபாய் 20 ஆயிரம் வழங்கப்படுவதாகவும், நெல் அறுவடை தரிசில் விதைக்கப்பட்டு சேதமடைந்த இளம் பயறு வகை பயிர்களுக்கு இழப்பீடாக எக்டேருக்கு ரூபாய் 3 ஆயிரம் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
2.PM Kisan திட்டத்தின் கீழ் இடம்பெறாத விவசாயிகளின் பட்டியல் வெளியீடு
நீலகிரி மாவட்டத்திற்குட்பட்ட கிராமங்களில் இருந்து PM kisan திட்டத்தின் கீழ் பயன்பெறும் விவசாயிகளின் பட்டியல் ஆய்வு செய்யப்பட்டு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் PM kisan திட்டத்தின் கீழ் பயன்பெற்று வரும் மற்றும் கிராமங்களில் இல்லாத விவசாயிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் உங்கள் பெயரை இருக்க இல்லையா என்று பார்க்க நிலகிரி மாவட்டத்தின் ஆதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்க்கவும்.
3.உளுந்து விவசாயிகளுக்கு 50% மானியத்தில் விதை வழங்கிட அறிவிப்பு!
டெல்டா மாவட்டங்களில் பருவமழையால் ஏற்பட்டுள்ள பயிர் சேதம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இம்மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து இழப்பீடாக பேரிடர் மேலாண்மை விதிமுறைகளின்படி, பாதிக்கப்பட்ட உளுந்து விவசாயிகளுக்கு மீண்டும் உளுந்து விவசாயம் செய்ய 50 சதவிகிதம் மானியத்தில் ஒரு ஏக்கருக்கு 8 கிலோ பயறு விதைகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், டெல்டா மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் நெல் அறுவடையை உடன் மேற்கொள்ள வேளாண் பொறியியல் துறை மூலம் 50 சதவிகிதம் மானியத்தில் நெல் அறுவடை இயந்திரம் வாடகைக்கு வழங்கப்படும் என தெறிவிக்கப்பட்டுள்ளது.
4.28ம் தேதி வரை கால்நடைகளுக்கு கருச்சிதைவு நோய் தடுப்பூசிப் பணி முகாம்
கால்நடைகள் குறிப்பாக பசுக்களுக்கு சினையுற்ற பின் ஒருவித பாக்டீரியா நுண்கிருமியின் மூலம் கருச்சிதைவு நோய் ஏற்பட்டு கரு கலைந்து விடுகிறது. மேலும், இந்நோயுற்ற கால்நடைகளின் பிறப்பு உறுப்பிலிருந்து வெளிப்படும் திரவங்கள் மூலம் இதர மாட்டினங்களுக்கு இது பரவ ஏதுவாகிறது. எனவே பால் பண்ணையாளர்களுக்கு ஏற்படும் நஷ்டத்தை தவிர்க்கவும், சிறந்த மற்றும் சுகாதாரமான முறையில் பால் உற்பத்தியை பெருக்கவும் 4 முதல் 8 மாத வயதுள்ள இளம் கிடேரி கன்றுகளுக்கு இத்தடுப்பூசியினை செலுத்தும் பட்சத்தில் ஆயுள் நாள் முழுவதும் இந்நோய்க்கான எதிர்ப்பு சக்தி ஏற்பட்டுவிடும். ஆகையினால் தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத் துறை மூலம் விருதுநகர், கரூர் மாவட்டத்தில் கடந்த 1ம் தேதி முதல் வரும் 28ம் தேதி முடிய இளம்கன்றுகளுக்கு சிறப்பு முகாம் நடத்தி இத்தடுப்பூசிப்பணி மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. முகாம்கள் நடைபெறும் இடம், ஊராட்சி குறித்து தொடர்பு கால்நடை உதவி மருத்துவர்கள் மூலம் அறிந்து கொள்ளலாம்.
5.வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் டிஜிட்டல் தளத்தை வலுப்படுத்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது
இந்திய அரசின் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம், தேசிய அளவிலான டிஜிட்டல் விரிவாக்கத் தளத்தை உருவாக்க பொதுத் தனியார் கூட்டாண்மை கட்டமைப்பின் கீழ் டிஜிட்டல் கிரீன் நிறுவனத்துடன் புது தில்லியில் பிப்ரவரி 6 2023, புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இந்த தளமானது பல வடிவிலான பல மொழி உள்ளடக்கங்களைக் கொண்ட டிஜிட்டல் நூலகத்தை வழங்கும், விரிவாக்கத் தொழிலாளர்கள் சரியான நேரத்தில் விவசாயிகளுக்குத் தொகுக்கப்பட்ட உள்ளடக்கத்தை அணுகவும் வழங்கவும் உதவும் மற்றும் விவசாயம், தோட்டக்கலை, மீன்வளம், கால்நடைகள் மற்றும் கிராமப்புற வாழ்வாதாரப் பணிகளுக்கான விரிவாக்கப் பணியாளர்களின் பரந்த நெட்வொர்க்கை மேம்படுத்தும். சிறு மற்றும் குறு விவசாயிகளின் உற்பத்தித்திறன் மற்றும் வருவாயை அதிகரிக்கவும், அவர்களின் முகமையைப் பலப்படுத்தவும், சமூக அளவிலான பின்னடைவைக் கட்டியெழுப்பவும் தொழில்நுட்பத்தின் ஆற்றலைப் பயன்படுத்தி, விருது பெற்ற சமூக நிறுவனமான டிஜிட்டல் கிரீனுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
6.TNAU வழங்கும் விதைப் பரிசோதனை குறித்து ஒரு நாள் கட்டணப் பயிற்சி
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் விதை அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை விதை மையம், கோயம்புத்தூர், விதை தரப் பரிசோதனை குறித்து கட்டணப் பயிற்சி ஏற்பாடு செய்துள்ளது. இந்த பயிற்சி பிரதி ஆங்கில மாதம், 10ம் தேதி அளிக்கப்பட உள்ளது. இதில்,
விதையின் புறத்தூய்மை
விதை முளைப்புத்திறன் மற்றும் வீரியம்
விதை நலம் மற்றும்
துரித முறை விதை பரிசோதனை
போன்ற தலைப்புகள் இடம் பெறும். பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ள விவசாயப் பெருமக்கள், தொழில் முனைவோர், சுய உதவிக் குழு உறுப்பினர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோர் தங்கள் பெயரை திரையில் தோன்றும் எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. நேரடி பதிவு செய்யும் வசதியும் உள்ளது.
7. சின்ன வெங்காயம் விலை குறைய வாய்ப்பு! TNAU தகவல்
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில், வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டுத் திட்டத்தின் விலை முன்னறிவிப்புத் திட்டமானது, சின்ன வெங்காயத்திற்கான விலை முன்னறிவிப்பை உருவாக்கியுள்ளது. வர்த்தக மூலங்களின்படி, கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் பெய்த பருவமழை காரணமாக பயிர் சேதமடைந்து உள்ள காரணத்தால் தமிழ்நாட்டு சந்தைக்கு சின்னவெங்காயம் வரத்து குறைந்துள்ளது. இதனால் சின்ன வெங்காயத்தின் விலை சமீப காலமாக அதிகரித்து காணப்பட்டது. நடப்பாண்டின் பயிர் அறுவடை மற்றும் கர்நாடக வரத்து காரணமாக பிப்ரவரி-மார்ச் 2023ல் சின்ன வெங்காயத்தின் விலை குறைய வாய்ப்புள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது.
8. இந்திய ரயில்வே புதிய சேவையை அறிமுகம்: வாட்ஸ்அப் மூலம் ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்யலாம்!
இந்திய ரயில்வேயின் பொதுத்துறை நிறுவனமான ஐஆர்சிடிசி, இரயில்வே பயணிகளுக்கு இ-கேட்டரிங் சேவைகள் மூலம் உணவை ஆர்டர் செய்ய வாட்ஸ்அப் தொடர்பை அறிமுகப்படுத்தியுள்ளது.
வாட்ஸ்அப் எண் +918750001323வாடிக்கையாளர்களுக்கு இரட்டை தொடர்பு தளமாக இருக்கும். AI இயங்கும் சார்ட்போர்டு பயணிகளுக்கான இ-கேட்டரிங் சேவைகள் மற்றும் அவர்களுக்கான உணவுகளை முன்பதிவு செய்வதற்கான அனைத்து விஷயங்களையும் கையாளும் என்பது குறிப்பிடதக்கது. தேர்ந்தெடுக்கப்பட்ட ரயில்கள் மற்றும் பயணிகளுக்கு இ-கேட்டரிங் சேவைகளுக்கான வாட்ஸ்அப் தொடர்பு செயல்படுத்தப்பட்டுள்ளது.
9. இன்றைய காய்கறி விலை நிலவரம்
கத்தரிக்காய்: ரூ. 20
சின்னவெங்காயம்: ரூ.50
பெரிய வெங்காயம்:ரூ.20
தக்காளி: ரூ.20
வெண்டை: ரூ.90
அவரை:ரூ.30
முள்ளங்கி:ரூ.12
உருளை: ரூ.25
கேரட்: ரூ.25
பீட்ரூட்: ரூ.20-க்கும்
விற்பனையாகிவருகிறது.
10. வானிலை அறிக்கை
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மலை பெய்ய கூடும். மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவுமில்லை.
அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.
உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....