பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 8 July, 2022 7:42 AM IST

விவசாயிகள் தோட்டக்கலைத் துறை மூலம் நுண்ணீர் பாசனத்திட்டத்தில் பயன்பெற முன்வருமாறு, விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் அழைப்பு விடுத்துள்ளார். இந்தத் திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு ரூ.25,000 மானியமாக வழங்கப்படுகிறது.

நீர் சிக்கனம்

வேளாண் உற்பத்தியில் நிலம், நீர் மற்றும் இடுபொருட்களே அடிப்படைக் காரணிகளாக உள்ளன. இவற்றுள் பயிர் சாகுபடிக்கு கிடைக்கும் நீரின் அளவு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. இதுபோன்ற சூழலில் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி அதிக பரப்பில் சாகுபடி செய்வது அவசியமாகும்.

நுண்ணீர் பாசனத் திட்டம்

சொட்டுநீர் பாசனம் மற்றும் தெளிப்பு நீர் பாசனம் போன்ற பாசன முறைகளைப் பயன்படுத்தி விவசாயிகள் பயன்பெற பிரதமரின் நுண்ணீர் பாசனத் திட்டம் தோட்டக்கலை துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ரூ.25,000 மானியம்

விருதுநகர் மாவட்டத்தில் நுண்ணீர் பாசனத் திட்டத்தின் கீழ் 2022-23 நிதியாண்டில் 1200 ஹெக்டர் பரப்பில் சொட்டு நீர் பாசனம் மற்றும் தெளிப்பு நீர் பாசனம் அமைக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் விவசாயிகளை ஊக்குவிக்க துணைநிலை நீர் மேலாண்மை செயல்பாடுகள் திட்டத்தின்கீழ் பாதுகாப்பான குறு வட்டங்களில் புதிய ஆழ்துளை கிணறு மற்றும் குழாய் கிணறு அமைப்பதற்கு தலா ரூ.25,000 மானியம் வழங்கப்பட உள்ளது.

இது தவிர மின்மோட்டார் அமைப்பதற்க்கு ரூ.15,000மும், பாசன நீர் கொண்டு செல்லும் குழாய் அமைப்பதற்கு ரூ.10,000மும், நீர் சேகரிப்பு தொட்டி அமைப்பதற்கு ரூ.40,000 என்ற அளவிலும் மானிய உதவி வழங்கப்படுகிறது.

முன்னுரிமை

மேலும், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள கிராம பஞ்சாயத்துகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு 80 சதவீத இலக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் சிறு/குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்படவுள்ளது.

இத்திட்டத்தில் பயனடைய விரும்பும் விவசாயிகள் தங்கள் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், சிறு,குறு விவசாயி சான்று, கணினி சிட்டா, அடங்கல், நிலத்தின் வரைபடம், மண் மற்றும் நில பரிசோதனை ஆய்வு அறிக்கை ஆகிய ஆவணங்களுடன் விருதுநகர் மாவட்ட வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகங்களை அணுகி பயன்பெறலாம்.
தகவல்
ஜெ.மேகநாதரெட்டி
விருதுநகர் மாவட்ட ஆட்சியர்

மேலும் படிக்க...

அடுத்த வாரம் குறைகிறது சமையல் எண்ணெய் விலை!

ரேஷனில் சூப்பர் மார்க்கெட்- தமிழக அரசு திட்டம்!

English Summary: Rs.25,000 Subsidy for Micro Irrigation - Apply Now!
Published on: 08 July 2022, 07:32 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now