விவசாயிகளுக்கு பிரதமர் கிசான் மான் ஜன் யோஜனாத் திட்டத்தின் கீழ் மாதம் 3,000 ரூபாய் ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது. எனவே தகுதியான விவசாயிகள் இந்தத்திட்டத்தில் தங்களை இணைத்துக்கொள்ள வேண்டியது மிக மிக அவசியம். இதனைத் தெரிந்துகொண்டு, தவறாமல் விண்ணப்பிக்குமாறு அனைத்து விவசாயிகளும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
விவசாயிகளுக்கு பென்சன் வழங்குவதற்காக பிரதமர் கிசான் மான் தன் யோஜனா திட்டம் (PM Kisan Maan Dhan Yojana) அறிமுகப்படுத்தப்பட்டது. சிறு, குறு விவசாயிகளுக்கு முதியோர் பென்சன் வழங்குவதுதான், இந்தத்திட்டத்தின் நோக்கம்.
தகுதி
இந்தத் திட்டத்தின் பயனாளிகள் கிசான் பென்சன் திட்டத்தில் இணைவதற்கு தகுதியுடையவர்கள் ஆவர். இத்திட்டத்துக்காக எல்ஐசி நிறுவனத்துடன் மத்திய வேளாண்மை, கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நலத் துறை கூட்டணி அமைத்துள்ளது.
மாதம் ரூ.3,000
கிசான் பென்சன் திட்டத்தின் கீழ் சிறு, குறு விவசாயிகள் 60 வயதை தொட்டபின் மாதம் 3000 ரூபாய் ஓய்வூதியமாக வழங்கப்படும். இதுவொரு தன்னார்வ மற்றும் பங்களிப்பு பென்சன் திட்டம். 18 முதல் 40 வயது வரையிலானவர்கள் கிசான் பென்சன் திட்டத்தில் இணையலாம்.
பிரிமியம்
மாதம் தோறும் 55 ரூபாய் முதல் 200 ரூபாய் வரை செலுத்தி வர வேண்டும். 60 வயதை தொட்டபின் மாதம் தோறும் சிறு, குறு விவசாயிகளுக்கு 3000 ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படும்.
யாருக்கு கிடைக்காது?
எனினும், தேசிய பென்சன் திட்டம், தொழிலாளர் ஈட்டுறுதிக் கழகம், தொழிலாளர் நிதி அமைப்பு திட்டம் உள்ளிட்ட சமூக பாதுகாப்பு திட்டங்களின் கீழ் பயன்பெறும் விவசாயிகளுக்கு கிசான் பென்சன் கிடைக்காது.
மேலும் படிக்க...