Farm Info

Thursday, 24 November 2022 08:07 AM , by: Elavarse Sivakumar

பந்தல் காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிப்பதற்காக, அரசு சார்பில் 80,000 ரூபாய் பின்னேறபு மானியமாக வழங்கப்படுகிறது. இதனைப் பெற்று பயனடையுமாறு தோட்டக்கலைத் துறை அழைப்பு விடுத்துள்ளது.

பந்தல் சாகுபடி

பீா்க்கங்காய், புடலங்காய், பாகற்காய், சுரைக்காய் போன்ற கொடிக் காய்கறிகளை பந்தல் அமைத்து சாகுபடி செய்தால் அதிக மகசூல் கிடைக்கும். மேலும் காய் நீளமாகவும், ஆரோக்கியமாகவும் வளரும். இவை பொதுவாக பந்தல் காய்கறிகள் என்று அழைக்கப்படுகின்றன.

மானியம்

நிதிப் பற்றாக்குறை காரணமாக பல விவசாயிகள் பந்தல் சாகுபடி முறைக்கு மாறுவதில் சிரமம் உள்ளது. விவசாயிகளின் சிரமத்தை போக்கும் வகையில் தோட்டக்கலை சாா்பில் தேசிய வேளாண்மை வளா்ச்சித் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பந்தல் அமைக்க மானியம் வழங்கப்படுகிறது.

பின்னேற்பு மானியம்

இது குறித்து கோவை மாவட்டம் பொங்கலுாா் வட்டார தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் ஷா்மிளா கூறியதாவது: பந்தல் காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.80 ஆயிரம் பின்னேற்பு மானியமாக வழங்கப்படுகிறது.

தொடர்புக்கு

இதில் பயனடைய விரும்பும் விவசாயிகள் சிட்டா, அடங்கல், எஃப்.எம்.பி. வரைபடம், கிராம நிா்வாக அலுவலா் சான்று, ஆதாா், குடும்ப அட்டை நகல், வங்கி புத்தக நகல் ஆகியவற்றுடன் தோட்டக்கலைத் துறை அலுவலகத்தை அணுகி பயன் பெறலாம்.  மேலும், விவரங்களுக்கு 7708330870, 9095628657, 89392 63412 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்தாா்.

மேலும் படிக்க...

குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

சயனைடை விட 6,000 மடங்கு - அதிக நச்சுள்ள உலகின் கொடிய தாவரம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)