இந்தியாவில், ஊட்டச்சத்து குறைபாட்டை கட்டுபடுத்துவதில் சர்க்கரைவள்ளி கிழங்கு அதிக முக்கியத்துவம் பெறுகிறது, குறிப்பாக ஆரஞ்சு சதை கொண்ட சர்க்கரைவள்ளி கிழங்கு நாட்டின் பழங்குடி குடியிருப்புகளில் வைட்டமின்-ஏ குறைபாட்டை சரி செய்கிறது.
கால்நடை தீவனம் மற்றும் தொழில்துறை பயன்பாடுகளில் சர்க்கரைவள்ளி கிழங்கு பல்துறை உணவுப்பயிராகக் கருதப்படுகிறது. ஒடிசா, மேற்கு வங்காளம், உத்தரப்பிரதேசம் மற்றும் கேரளா ஆகியவை சர்க்கரைவள்ளி கிழங்கு உற்பத்தி செய்யும் முக்கிய மாநிலங்களாகும், அவை இந்தியாவில் 76% பரப்பளவிலும் 78% உற்பத்தியிலும் பங்களிக்கின்றன. சர்க்கரைவள்ளி கிழங்கிலுள்ள இரகங்களின் விவரம் பின்வருமாறு-
வர்ஷா:
- பயிர் காலம்: 120 நாட்கள்
- மகசூல்: 17-22 டன்/ஹெக்டேர்
- வறட்சியை தாங்கி வளரக்கூடியது
ஸ்ரீ நந்தினி:
- பயிர் காலம்: 105-120 நாட்கள்
- மகசூல்: 20-25 டன்/ஹெக்டேர்
- வறட்சியை தாங்கி வளரக்கூடியது
பு சோனா:
- பயிர் காலம்: 105-110 நாட்கள்
- மகசூல்: 20-24 டன்/ஹெக்டேர்
- உப்பு தன்மை கொண்ட நிலங்ககளில் வளரக்கூடியது
பு கிருஷ்ணா:
- பயிர் காலம்: 110-120 நாட்கள்
- மகசூல்: 18-22 டன்/ஹெக்டேர்
- உப்பு தன்மை கொண்ட நிலங்களில் வளரக்கூடியது
பு சுவாமி:
- பயிர் காலம்: 105-110 நாட்கள்
- மகசூல்: 20-21 டன்/ஹெக்டேர்
- வறட்சியை தாங்கி வளரக்கூடியது
சர்க்கரைவள்ளிகிழங்கு முக்கியமாக மே-ஜூன் மாதங்களில் மானாவாரி பயிராக பயிரிடப்படுகிறது. செப்டம்பர்–அக்டோபர் மாதங்களில் நீர்ப்பாசன பயிராக பயிரிடப்படுகிறது. இரண்டாம் நெல் அறுவடைக்குப் பிறகு ஜனவரி முதல் ஏப்ரல் வரை தாழ்நிலங்களில் சர்க்கரைவள்ளிகிழங்கு நெல் பயிர் சுழற்சி முறையில் பயிரிடப்படுகிறது.
நீர்ப்பாசனம்:
- நடவு நேரத்தில் போதுமான ஈரப்பதம் உறுதி செய்யப்பட வேண்டும்.
- விதை படுக்கை நடவு செய்த 4-5 நாட்களுக்கு ஈரமாக இருக்க வேண்டும்.
- அறுவடைக்கு 2-3 வாரங்களுக்கு முன்பு நீர்ப்பாசனம் நிறுத்தப்பட வேண்டும்.
உரமேலாண்மை முறை:
தழைச்சத்து: மணிசத்து: சாம்பல்சத்து (கிலோ/ஹெக்டேர்) முறையே 50: 25: 50 என பரிந்துரைக்கப்படுகிறது. ஒரு ஹெக்டேருக்கு 2 கிலோ அசோஸ்பைரில்லத்துடன் 2/3 பரிந்துரைக்கப்பட்ட அளவு தழை சத்தில் கொடியை நனைக்க வேண்டும். ஒரு ஹெக்டேருக்கு 10 கிலோ அசோஸ்பைரில்லம் மண்ணில் பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது.நடவு செய்த 15, 30 மற்றும் 45 நாட்களில் லிட்டருக்கு 5 மில்லி லிட்டர் மைக்ரோனோல் (சர்க்கரைவள்ளி கிழங்கு) தெளிப்பது நன்மை தரும்.
சர்க்கரை வள்ளிக்கிழங்கில், சராசரி மகசூலாக 10-28 (டன்/ஹெக்டேர்) பெற முடியும். இந்தியச் சந்தைகளில் கிழங்கு வகைகளில் சர்க்கரை வள்ளிக்கிழங்கிற்கு நல்ல டிமாண்ட் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இக்கட்டுரை தொடர்பான மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்க: முனைவர் சொ. மோகன், முதன்மை விஞ்ஞானி, ஐ. சி. ஏ. ஆர் -மத்திய கிழங்கு பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனம், ஸ்ரீகாரியம், திருவனந்தபுரம்-695017, கேரளா. மின்னஞ்சல்: Mohan.C@icar.gov.in
Read more:
வெற்றிலை வள்ளி கிழங்கில் உயிர் வலுவூட்டல்- மறைந்திருக்கும் பயன்கள்