Farm Info

Saturday, 03 September 2022 11:37 AM , by: R. Balakrishnan

Paddy seeds

பாரம்பரியம் மிக்க மரபுசார் நெல் ரகங்கள் 50% மானியத்தில் விற்பனை செய்யபப்படும் என்று நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கோவிந்தசாமி தெரிவித்துள்ளார்.

50% மானியம் (50% Subsidy)

தமிழ்நாட்டில் பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுப்பதற்காக நெல் ஜெயராமனின் மரபுசார் நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கத் திட்டத்தின் கீழ் பாரம்பரிய விதை நெல்லான கருப்புக்கவுணி மற்றும் தூயமல்லி ரகங்கள் பரமத்தி வேளாண்மை விரிவாக்க மையத்திற்கு வரவுள்ளது.

அதே சமயம் விதை நெல் தேவைப்படும் விவசாயிகள் 50 சதவீத மானிய விலையில் பெற்று பயன் பெறலாம். மேலும் தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் விதை நெல்லான டி.கே.எம்-13 மற்றும் ஆர்.என்.ஆர்-15048 ரகங்கள் போதிய அளவு இருப்பில் உள்ளது.

இந்த விதை நெல் தேவைப்படும் விவசாயிகள் இதனையும் 50 சதவீத மானிய விலையில் பெறலாம்.மேலும் விபரங்களுக்கு அந்த அந்த பகுதியிலுள்ள உதவி வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொண்டோ அல்லது பரமத்தி வேளாண்மை விரிவாக்க மையத்தினை அணுகியோ பயன் பெறலாம் என்று பரமத்திவேலூர் வேட்டார வேளாண்மை உதவி இயக்குநகர் கோவிந்தசாமி தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க

பயிர் காப்பீட்டு திட்டத்தை மாற்றி அமைக்கும் முயற்சியில் மத்திய அரசு!

விவசாயிகளுக்கு 25% மானிய உதவி: வெளியானது அருமையான அறிவிப்பு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)