Farm Info

Thursday, 27 October 2022 07:49 AM , by: R. Balakrishnan

Samba paddy crop insurance

சம்பா நெல் பயிருக்கு காப்பீடு செய்து விவசாயிகள் பயன்பெறலாம் என ஈரோடு வேளாண்மை இணை இயக்குநர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வேளாண்மை இணை இயக்குநர் சின்னசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் இழப்புகளுக்கு நிதியுதவி வழங்கி பாதுகாக்கவும், பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும் மற்றும் அதிநவீன தொழில் நுட்பங்களை கடை பிடிப்பதை ஊக்குவிக்கவும், பிரதம மந்திரியின் திருந்திய பயிர் காப்பீட்டுத் திட்டம், தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

சம்பா நெல் பயிர் காப்பீடு (Samba paddy crop insurance)

ஈரோடு மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்தில் அக்ரிகல்சுரல் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா நிறுவனத்தின் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அறிவிக்கை செய்யப்பட்டுள்ள பயிர்கள் நடப்பு சம்பா பருவத்தில் நெல் பயிர் பிர்க்கா அளவில் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 28 பிர்காக்கள் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளன. அறிவிக்கை செய்யப்பட்டுள்ள பிர்காக்களின் கீழ் உள்ள அனைத்து வருவாய் கிராமங்களைச் சேர்ந்த அனைத்து விவசாயிகளும் திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம். சம்பா நெல் பயிருக்கு பிரீமியத் தொகையாக ஏக்கருக்கு 554.25 ரூபாய் செலுத்த வேண்டும்.

அறிவிக்கை செய்யப்பட்டுள்ள பிர்காக்களைச் சார்ந்த கடன் பெறும் விவசாயிகள், தாங்கள் பயிர் கடன் பெறும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாக தங்கள் விருப்பத்தின் பேரில் பதிவு செய்து கொள்ளலாம். அறிவிக்கை செய்யப்பட்டுள்ள பிர்காக்களைச் சார்ந்த கடன் பெற விவசாயிகள், நடப்பு பசலி ஆண்டுக்கான அடங்கல் அல்லது பயிர் சாகுபடி சான்றை கிராம நிர்வாக அலுவலரிடம் பெற்று அதனுடன் வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் சிட்டா ஆகியவற்றை பொது சேவை மையங்கள் அல்லது தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாக பதிவு செய்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்க (For Apply)

வருகின்ற நவம்பர் 15, 2022 ஆம் தேதி சம்பா நெல் பயிருக்கு காப்பீடு செய்யக் கடைசி நாளாகும். இறுதி நேர கூட்ட நெரிசலை தவிர்க்கவும், விண்ணப்பங்கள் விடுபடாமல் இருக்கவும் பிரதம மந்திரியின் திருந்திய பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் குத்தகை விவசாயிகள் உள்பட அனைத்து விவசாயிகளும் முன் கூட்டியே பதிவு செய்து தங்கள் சம்பா நெல் பயிர்களுக்கு ஏற்படும் எதிர்பாராத மகசூல் இழப்புகளில் இருந்து பாதுகாத்து பயனடையலாம்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க

PM Kisan: ஏன் சில விவசாயிகளுக்கு மட்டும் பணம் வரவில்லை: காரணம் இது தான்!

PM Kisan திட்டம்: போஸ்ட் ஆபிஸ் போனாலே போதும் விவசாயிகள் இதைச் செய்ய!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)