மாநிலம் முழுதும் 34 லட்சம் ஏக்கரில் சம்பா பருவ நெல் சாகுபடிக்கு, வேளாண் துறையினர் இலக்கு நிர்ணயித்துள்ளனர்.
சம்பா பருவ சாகுபடி
வடகிழக்கு பருவ மழை துவங்கவுள்ள நிலையில், சம்பா பருவ நெல் சாகுபடியில், விவசாயிகள் கவனம் செலுத்தி வருகின்றனர். டெல்டா மாவட்டங்களில் 13.5 லட்சம் ஏக்கரில், சம்பா பருவ நெல் சாகுபடிக்கு வேளாண் துறையினர் இலக்கு நிர்ணயித்துள்ளனர்.
இலக்கு
மாநிலம் முழுதும் இப்பருவத்தில் 33.9 லட்சம் ஏக்கரில், நெல் சாகுபடிக்கு இலக்கு நிர்ணயிக்கப் பட்டு உள்ளது.சம்பா பருவ சாகுபடிக்கான நடவுப் பணிகள், அக்டோபர் இறுதி வரை மேற்கொள்ளப்படும். இதுவரை, டெல்டா மாவட்டங்களில் 3.61 லட்சம் ஏக்கரிலும், மாநிலம் முழுதும் 6.81 லட்சம் ஏக்கரிலும் நடவுப் பணிகள் முடிந்துள்ளன.பல மாவட்டங்களில் பெய்து வரும் மழை, சாகுபடிக்கு கைகொடுத்து வருகிறது.
டெல்டா மாவட்டங்களில் மழை பெய்யாததால், நடவுப் பணிகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து, சேலம் - மேட்டூர் அணையில் இருந்து, நேற்று முதல் நீர் திறப்பு வினாடிக்கு 7,000 கன அடியில் இருந்து 12 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. சாகுபடிக்கு தேவையான உதவிகளை விவசாயிகளுக்கு உடனுக்குடன் வழங்க, வேளாண் துறை செயலர் சமயமூர்த்தி, இயக்குனர் அண்ணாதுரை ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர்.
மேலும் படிக்க
கலப்படமில்லாத உணவே விவசாயிகளின் சாதனை: அசத்திய ராம்குமார்!
நெல் விற்பனைக்கு ஆன்லைன் பதிவு முறை: விவசாயிகள் எதிர்ப்பு!