தனது தோட்டத்தில் சம்பங்கி மலர் சாகுபடி செய்யும் விவசாயி அந்தத் தோட்டத்தில் களை எடுக்க நேரத்தையும் செலவையும் மிச்சம் செய்யும் வகையில் சைக்கிள் ஏர் கலப்பையை (bicycle air plow) உருவாக்கி அதை தனது மகனுடன் இயக்கிவருகிறார்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்து அசூர் கிராமத்தில் நாகராஜ் என்ற விவசாயி தனது விவசாய நிலத்தில் சம்பங்கி மலர் சாகுபடி செய்து வருகிறார். இந்த சம்பங்கி மலர் தோட்டத்தில் களை எடுக்க ஆட்கள் அதிகளவில் தேவைப்படுகிறார்கள். செலவும் அதிகமாகவே ஏற்படுகிறது. இதனால் அவர் சைக்கிள் ஏர் கலப்பையை(bicycle air plow) உருவாக்குவதன் மூலம் அதை பயன்படுத்தி தானே களை எடுத்து வருகிறார். அதற்கு அவரது மகன் பெரும்துணையாக இருக்கிறார்.
இப்போதெல்லாம் 100 நாள் வேலை திட்டம் பணிகளுக்கு விவசாய தொழிலாளர்கள் எல்லோரும் சென்றுவிடுவதால் களை எடுக்க ஆட்கள் கிடைப்பதில்லை. அப்படியே ஆட்கள் கிடைத்தாலும் கூட ஒரு ஏக்கருக்கு 5 நாட்களில் களை எடுக்க 40 ஆட்கள் கூலியாக 6000 ரூபாய் அல்லது அதற்குமேல் செலவாகிறது. இதேபோல் எட்டு முறை களை எடுக்க வேண்டும். அதனால் களை எடுப்பதற்கு மட்டுமே 48 ஆயிரம் ரூபாய் செலவு வேண்டிய நிலை உள்ளது.
விவசாயி நாகராஜுக்கு இது மிகவும் சிரமமாக இருந்தது. பணத்தை செலவழித்தும் கூலியை கொடுத்தும் ஆட்களை கொண்டு வருவதற்கு பெரும்பாடாக இருக்கிறதே என்று கவலைக் கொண்டார்.
இந்த நிலையில் ஒரு முறை ஆந்திராவில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார் நாகராஜ், அங்கே ஒரு விவசாயி சைக்கிளில் ஒருபகுதியில் ஏர் கலப்பையை(bicycle air plow) பொருத்தி மலர் தோட்டத்தில் களை எடுப்பதை பார்த்தார். இதையே நாமும் முயற்சிக்கலாமே என்று தன் ஊருக்கு திரும்பியவுடன் தன் வீட்டில் இருந்த ஒரு சைக்கிளை எடுத்து அதன் ஒரு பக்க டயரையும் வீல்-ஐயும் அகற்றி விட்டு அந்தப் பகுதியில் அதாவது முன்பக்க டயரையும் வீல்-ஐயும் அகற்றி அதற்கு பதிலாக ஏர் கலப்பையை பொருத்தி கயிறு மூலம் இழுத்துச் செல்கிறார். பின்னால் அவரது மகன் ஏர் கலப்பையை பிடித்துக் கொண்டு செல்கிறார்.
இந்த சைக்கிள் ஏர் கலப்பையை(bicycle air plow) இயக்குவதற்கு இரண்டு பேர் தேவை. ஒரு ஏக்கர் நிலத்தில் ஐந்து மணி நேரத்திற்குள் களை எடுத்து விடுவதாக தெரிவித்தார் நாகராஜ். இந்த சைக்கிள் ஏர் கலப்பை செய்வதற்கு வெறும் 3 ஆயிரம் மட்டுமே செலவாகிறது என்று நாகராஜ் தெரிவித்தார், நேரமும் செலவும் மிச்சம் ஆவதால் வருமானம் அதிகம் கிடைக்கும் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க:
TNPSC தேர்வுக்கு ஆன்லைனில் தமிழக அரசு இலவச பயிற்சி!
மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்: கட்டுப்பாடுகளை மீறினால் கொரோனாவை ஒழிக்க முடியாது
தமிழகத்தில் 6 வாரங்களுக்கு பிறகு பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி