மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 24 July, 2020 7:19 PM IST

விவசாயிகள் பயிர் மற்றும் இடுபொருட்களை வாங்குதல் போன்ற, தங்களுடையப் பொருளதாரத் தேவைகளை எதிர்கொள்ள உதவும் வகையில், மத்திய- மாநில அரசுகளும் சில வங்கிகளும், பல்வேறு கடன் திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றன.

விவசாயிகள் எவ்வித சிரமம் இன்றி வங்கிக்கடன் பெற வேண்டும் என்பதே இந்தத் திட்டங்களின் இலக்கு.

ரூ.2 லட்சம் கோடி கடன் 

இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகள், மீனவர்கள், கால்நடை வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள், கால்நடை விவசாயிகள் உள்ளிட்ட 2.5 கோடி பேருக்கு, 2 லட்சம் கோடி ரூபாய் (2 Lakh Crore)கடன் சலுகை வழங்கப்படும் என மத்திய அரசு அண்மையில் அறிவித்தது.

இதன் ஒருபகுதியாக பிஎம் கிசான் யோஜனா (PM Kisan Yojana) திட்டத்தின் பயனாளிகள் அனைவருக்கும், கிசான் கடன் அட்டைகள் வழங்க நடவடிக்கை மேற்கொண்டது. இந்த திட்டத்தின் வெற்றியாக, தற்போது நம் நாட்டில் உள்ள விவசாயிகளில் 7 கோடி பேர் கிசான் கடன் அட்டையை வாங்கிப் பயன்படுத்திப் பயனடைந்து வருகின்றனர்.

இத்திட்டத்தில் வாங்கும் விவசாயக் கடனுக்கு 4 சதவீதம் மட்டுமே வட்டி.இந்நிலையில் இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான, பாரத ஸ்டேட் வங்கி (SBI) விவசாயிகளுக்கான சிறப்பு பயிர்க் கடன் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

எஸ்பிஐ ஸ்பெஷல் பயிர்க்கடன்

இந்த சிறப்புப் பயிர்க்கடன், எஸ்பிஐ கிசான் கடன் அட்டை மூலம் விவசாயிகள் எளிமையான முறையில் கடன் பெற்றுக்கொள்ள வழிவகை செய்கிறது. அதாவது பயிர் சாகுபடி, அதற்கு முந்தைய அறுவடைப்பணிகள் உள்ளிட்டவற்றுக்கு இந்த கடன் வழங்கப்படுகிறது.

விவசாயிகளுக்கு மிகவும் குறைந்த வட்டியில், எளிய நிபந்தனைகளுடன் கூடிய கடனை வழங்க வேண்டும் என்பதே இந்த திட்டத்தின் முக்கிய அம்சம்.

எஸ்பிஐ பயிர்க்கடனை கிசான் கடன் அட்டை மூலம் பெறுவது எப்படி? என்பது தொடர்பான விபரங்களை https://sbi.co.in/web/agri-rural/agriculture-banking/crop-loan/kisan-credit-card என்ற இணையதளத்தைப் பார்வையிட்டு விவசாயிகள் தெரிந்துகொள்ளலாம்.

ஏன் கிசான் கடன் அட்டை மூலம் பெற வேண்டும்?

கிசான் கடன் அட்டை வைத்துள்ள விவசாயிகளுக்கு 4 சதவீத வட்டியில் பாரத ஸ்டேட் வங்கி கடன் வழங்குகிறது.

இந்தத் திட்டத்தின் கீழ் நில உரிமையாளர்கள், நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்பவர்கள், நிலத்தை வாடகைக்கு எடுத்து விவசாயம் செய்பவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் கடன் வழங்கப்படும்.

4 சதவீத வட்டி

கிசான் கடன் அட்டை வைத்திருக்கும் விவசாயிகளிடம் இருந்து 9 சதவீத வட்டி வசூலிக்கப்படுகிறது. இதில் 2 சதவீதம் அரசின் சார்பில் மானியமாக வழங்கப்படுகிறது. இதன் மூலம் வட்டி 7 சதவீதமாகிறது. 

இதில் வாங்கியக் கடனை ஓராண்டிற்குள் செலுத்தும் விவசாயிக்கு, வட்டியில் மேலும் 3 சதவீதம் மானியமாக வழங்கப்படுகிறது. எனவே கடனுக்கான வட்டி விகிதம் 4 சதவீதமாகிறது.

பிஎம் கிசான் யோஜனா திட்டத்தின் மூலம் கடன் பெறுவதால், கிடைக்கும் பயன்கள்

  • ஆவண உத்திரவாதம் இன்றி ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் வரை கடன்.

  • முதல் ஓராண்டிற்கு கடனைத் திருப்பிச் செலுத்தும் வரை 7 சதவீத வட்டி.

  • ரூ.3 லட்சம் வரை 2 சதவீத வட்டி மானியம் பெற முடியும்.

  • ஓராண்டிற்குள் பணத்தை திரும்பச் செலுத்தும்போது, மேலும் 3 சதவீத வட்டி மானிய.

  • கிசான் கடன் அட்டை திட்டத்தின் கீழ், விவசாய நிலத்திற்கும், பயிருக்கும் காப்பீடு

தகுதியுடையவர்கள்

அனைத்து விவசாயிகள், நிலக்குத்தகைதாரர்கள், நிலத்தை வாடகைக்கு எடுத்து விவசாயம் செய்பவர்கள் மற்றும் பயிர் சாகுபடி பங்குதாரர்கள்

விவசாயம் செய்யும் சுயஉதவிக் குழுக்கள்

தேவைப்படும் ஆவணங்கள்

விண்ணப்பப் படிவம்

அடையாள மற்றும் முகவரிச்சான்று

இதில் வாக்காளர் அடையாள அட்டை, பான் அட்டை, பாஸ்போர்ட், ஆதார் மற்றும் ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை சமர்ப்பிக்கலாம்.

எஸ்பிஐ கிசான் கடன் அட்டை

மொபைலில் எஸ்பிஐயின் யூனோ ஆப்-பில் சென்று, கிசான் கடன் அட்டையில் உள்ள கையிருப்புத் தொகையைத் தெரிந்துகொள்ளலாம். மேலும், வாடிக்கையாளர் சேவை அதிகாரியைத் தொடர்பு கொண்டும் விபரங்களைத் தெரிந்து கொள்ளலாம்.

வாடிக்கையாளர் சேவை அதிகாரியைத் தொடர்பு கொள்ள இயலவில்லை என்றால், 1800112211, 18004253800 மற்றும் 080-26599990 கட்டணமில்லா சேவை எண்களையும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

மேலும் படிக்க...

நீரழிவு நோய்க்கான சில முக்கிய அறிகுறிகள்- கவனிக்கத் தவறாதீர்கள்!

ஊரடங்கால், இந்தியாவின் தேயிலை உற்பத்தி 54 சதவீதம் குறைந்தது - ஏற்றுமதி பாதிப்பு

English Summary: SBI offers special agricultural loans at just 4% interest
Published on: 24 July 2020, 05:17 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now