Farm Info

Friday, 16 September 2022 03:50 PM , by: Deiva Bindhiya

Scheme for mechanization from horti. Dept.: Subsidy for tractor and power tiller

மாநில அரசும், மத்திய அரசும் பல்வேறு மானியங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், விவசாயத்துறையில் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு மானியங்களை அறிவித்துள்ளது. அடுத்ததாக, அரசு கையில் எடுத்திருக்கும் நோக்கம் இயந்திரமயமாக்கல் திட்டமாகும்.

தோட்டக்கலை மலைப்பயிர்கள் துறை சார்பாக தோடக்கலை பண்ணை இயந்திரமயமாக்குதலை நோக்கமாக கொண்டுள்ளது. பணிச்சுமையை குறைக்க பவர் டில்லர் டிரேக்டர் போன்ற கருவிகளுக்கு அரசு மானியம் அறிவித்து வருகிறது. அதன் படி, தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் 40 சதவீத மானியத்தில் பவர் டில்லர் வாங்கும் வாய்ப்பு, விவசாயிகளுக்கு நல்ல வாய்ப்பாகும்.

பவர் டில்லர் - 8BHPக்கு மேல்- ரூ.60,000 பின்னேற்பு மானியமாக வழங்கப்படும். பவர் டில்லர் - 8BHPக்கு கீழ் ரூ.40,000 பின்னேற்பு மானியமாக வழங்கப்படும்.

அடுத்ததாக டிரேக்டர், 25 சதவீத மானியத்தில் தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் ரூ.75,000 பின்னேற்பு மானியமாக விவசாயிகளுக்கு வழங்கப்படும்.

இவ்விரணடு திட்டத்திலும் பயன்பெற tnhorticulture.tn.gov.in/tnhortnet என்ற இணையதளத்தில் பதிவுசெய்து பயன்பெறலாம்.

பவர் டில்லர்-இன் பயன் என்ன?

  • நிலத்தை சமன் செய்தல், வரப்பு அமைத்தல், மற்றும் பிரதான பயிர்களுக்கு இடையேயான இடத்தை உழுதல்
  • நேரம் மற்றும் வேலையாட்களின் பயன்பாட்டை குறைக்கிறது
  • விவசாயிகள் எளிதில் கையாளுதல்
  • களையை கட்டுப்படுத்தல்

மேலும் படிக்க:

SSC(CGL) தேர்வுக்கான இலவச பயிற்சி இந்த வாட்ஸப் எண்ணை அணுகுங்கள்!

தோட்டக்கலை துறை காளான் உற்பத்திக்கு 40% வரை மானியம் அறிவிப்பு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)