அந்த வகையில், மீன்வளர்ப்போருக்கு பல உதவிகளைச் செய்வதால், நாம்
மத்திய, மாநில அரசுகளின் மானியத் திட்டங்களை பயன்படுத்தி, விவசாயிகள் மீன் வளர்த்து லாபம் பெறலாம்.
இது தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
1.2 லட்சம் ரூபாய்
உள்நாட்டு மீன் உற்பத்தியை அதிகரிக்க, பல்நோக்கு பண்ணை குட்டையில் மீன் வளர்ப்போருக்கு அரசு ஒரு யூனிட்டுக்கு 18 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்குகிறது. பிரதமர் மீன் வள மேம்பாட்டுத்திட்டம் 2021- 22ம் ஆண்டு திட்டத்தில், 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 10 டன் திறன் கொண்ட குளிர் சேமிப்பகங்கள், பனிக்கட்டி உற்பத்தி நிலைய கட்டுமானங்கள் அமைக்க, 16 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. புறக்கடையில் அலங்கார மீன் வளர்ப்போருக்கு, 40 சதவீதம் மானியத்தை அரசு வழங்குகிறது. இதில் அதிகபட்சமாக 1.20 லட்சம் ரூபாய் மானியம் கிடைக்கும்.
தகுதி
பெண்கள், தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கு 60 சதவீதம் மானியம் உண்டு. உயிர் மீன் விற்பனை மையங்கள் அமைக்க 40 சதவீதம் மானியம், அதிகபட்சம் 8 லட்சம் ரூபாய் வழங்கப்படும். குளிர் காப்பிடப்பட்ட வாகனங்கள் வாங்க, பொதுப்பிரிவுக்கு 40 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. சிறிய அளவிலான பயோபிளாக் குளங்கள் அமைக்க, பொதுப்பிரிவுக்கு 40 சதவீதம் மானியமும், பெண்களுக்கு 60 சதவீதம் மானியமும் வழங்கப்படுகிறது.
இந்த திட்டங்களில் ஏதேனும் ஒன்றில் விவசாயிகள் மீன் வளர்த்து பயன் பெறலாம்.விருப்பம் உள்ளவர்கள், மீன் வள ஆய்வாளரை 96555 06422 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...