கோதுமை என்பது வட மாநில மக்களின் பிரதான உணவு என்பது நாம் அனைவரும் அறிந்ததே. எனவே பெரும்பாலான வேளாண் ஆராய்ச்சி நிறுவனங்கள் கோதுமை குறித்து பல ஆய்வுகளை மேற் கொண்டு வருகிறது. அந்த வகையில் பஞ்சாபில் அமைந்துள்ள தேசிய வேளாண் உணவு உயிரி தொழில்நுட்பம் நிலையம் கருப்பு கோதுமையை உருவாக்கி உள்ளனர். 7 ஆண்டுகள் முயற்சிக்கு பின் உருவாக்கி உள்ள இந்த கோதுமையை கடந்த வருடம் சோதனை முறையில் விவசாயிகளுக்கு வழங்கப் பட்டது.
மத்திய பிரதேசத்தை சேர்ந்த நீமுச் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் இந்த சோதனையில் பங்கேற்று, தற்போது கருப்பு கோதுமையை அறுவடை செய்துள்ளனர். ஊட்டச் சத்துக்கள் நிறைந்த இந்த கோதுமை பல்வேறு உடல் நோய்களை தீர்க்கும் என்கிறார்கள் இதை உருவாக்கிய வேளாண் விஞ்ஞானிகள். இதில் ஜிக் என்னும் மூலப் பொருள் அதிக அளவில் உள்ளது எனவும், இது புற்றுநோய், உடல் பருமன் மற்றும் நீரழிவு நோயை குணப்படுத்தும் என்கிறார்கள். மேலும் இது குறித்த விவரங்களுக்கு கீழ்காணும் முகவரியை தொடர்பு கொள்ளலாம்.
MAHADER GODARA
In a way India
inaway24@gmail.com
93552 11101
94164 08833
Anitha Jegadeesan
Krishi Jagran