நாட்டின் பல்வேறு பகுதிகளில் சம்பா சாகுபடி பயிர் காலம் தொடங்க உள்ளது. மானாவாரி பயிர் பருவத்தில் நெல்லுக்குப் பிறகு மக்காச்சோளம் அதிகம் பயிரிடப்படுகிறது. பச்சை தீவனம், தானியங்களுக்கு மக்காச்சோளம் பயிரிடப்படுகிறது. நாட்டின் பல பலபகுதிகளில்,இந்த நேரத்தில் அதாவது சம்பா சாகுபடி பருவத்தில் மக்காச்சோளம் சாகுபடி பெருமளவில் செய்யப்படும் என்று விவசாய விஞ்ஞானிகள் மதிப்பிடுகின்றனர். இத்தகைய சூழ்நிலையில், மக்காச்சோளத்தின் அதிகபட்ச உற்பத்தியைப் பெற விவசாய விஞ்ஞானிகளால் சில முக்கியமான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.
மக்காச்சோளம் சாகுபடிக்கு வயலை தயாரிப்பது
விவசாய விஞ்ஞானிகளின் கூற்றுப்படி,களிமண்ணில் மக்காச்சோளம் விளைவிப்பது நல்லது. மேலும் நிலத்தை நன்கு உழுவ வேண்டும். வயலைத் தயாரிப்பதைப் பொருத்தவரை, முதலில் வயலின் ஆழமான உழவு செய்யப்பட வேண்டும். அதன்பிறகு மண்ணை இரண்டு முதல் மூன்று உழவுகளை செய்திருக்க வேண்டும். விதை வீதம் பற்றி பேசுகையில், ஒரு ஹெக்டேருக்கு, 16 முதல் 18 கிலோ உள்நாட்டு மக்காச்சோளம் மற்றும் 18 கிலோ கலப்பின விதை தேவை. விதைகளை விதைப்பதற்கு முன் நன்கு சுத்திகரிக்க வேண்டும்
மக்காச்சோளம் பயிர்களை விதைப்பது எப்படி
விவசாய விஞ்ஞானி அமித் சவுபே கூறுகையில், மக்காச்சோளத்தின் ஆரம்ப வகைகளுக்கு, வரிசை தூரத்தை 45 செ.மீ வரை வைத்திருப்பது சிறந்தது என்றும், நடுத்தர மற்றும் பிற்பகுதி வகைகளுக்கு, 60 செ.மீ தூரத்தை வைத்திருப்பது சிறந்தது என்றும் கருதப்படுகிறது. மறுபுறம், நாம் உரங்களைப் பற்றி பேசினால், 60 கிலோ நைட்ரஜன், 30 கிலோ பாஸ்பரஸ் மற்றும் 30 பொட்டாஷ் ஆகியவை பாரம்பரிய வகைகளுக்கும், 100 கிலோ நைட்ரஜன், 30 கிலோ பாஸ்பரஸ் மற்றும் கலப்பின வகைகளுக்கு ஒரு ஹெக்டர் கணக்கிற்கு 40 கிலோ பொட்டாஷ் கொடுக்க வேண்டும். அதே நேரத்தில், ஒரு ஹெக்டேருக்கு 10 டன் சிதைந்த உரத்தையும் பயன்படுத்தலாம். மாட்டு சாணத்தைப் பயன்படுத்திய பிறகு, நைட்ரஜனின் அளவை 25 கிலோ குறைப்பது அவசியம்.
மக்காச்சோளம் பயிர்களைப் பயிரிட விஞ்ஞானிகளின் ஆலோசனை
தலைமை வேளாண் விஞ்ஞானி நரேந்திர சிங் ரகுவன்ஷி கூறுகையில், ஜான்பூர் மாவட்டத்திற்கு மக்காச்சோளம் பயிரிடுவதற்கு சிறப்பு அங்கீகாரம் கிடைத்துள்ளது. ஆனால் இது இருந்தபோதிலும், இங்குள்ள விவசாயிகளால் மக்காச்சோளம் எதிர்பார்க்கப்படும் விளைச்சலைப் பெற முடியவில்லை. தற்போது, ஒரு ஹெக்டேருக்கு 32 குவிண்டால் மக்காச்சோளம் உற்பத்தி செய்யப்படுகிறது. அதேசமயம் அது ஒரு ஹெக்டேருக்கு 40 முதல் 45 குவிண்டால் இருக்க வேண்டும். இத்தகைய சூழ்நிலையில், மக்காச்சோள உற்பத்தியை அதிகரிக்க, விஞ்ஞான முறையில் சாகுபடி செய்யப்பட வேண்டும். இதற்காக, ஒரு ஹெக்டேருக்கு 20 கிலோ சல்பேட் பயன்படுத்த வேண்டும், இது உற்பத்தியை அதிகரிக்கிறது. அதே நேரத்தில், மக்காச்சோளத்தை விதைப்பது சரியான நேரத்தில் செய்யப்பட வேண்டும்,சரியான நேரத்தில் விதைத்தால் அதிகளவில் உற்பத்தி கிடைக்கும் ,அதிகளவில் மகசூலையும் பெற முடியும்.
மேலும் படிக்க:
Kharif crops: காரீஃப் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலைகள் நிர்ணயம்!!
மக்கச்சோளத்திற்கு இந்த முறை என்ன விலை கிடைக்கும் - TNAU கணிப்பு!
கோடைக் காலத்தில் இந்த பயிர்களை வளர்ப்பதன் மூலம் விவசாயிகள் அதிக லாபம் பெற முடியும்