இந்தியாவின் பணக்கார விவசாயி: RFOI விருதினை வென்ற குஜராத் பெண்! விவசாயத்தில் மட்டும் 50 கோடி.. RFOI விருதினை வென்ற யுவராஜின் வெற்றிக் கதை! நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 2 May, 2021 4:09 PM IST
Credit : Dinamalar

தமிழகம் முழுவதும் ஏப்ரலில் கோடை மழை பரவலாக பெய்துள்ளது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது. கிணற்று பாசனம் செய்யும் விவசாயிகள் காய்கறி, கீரைகள், கால்நடை தீவன பயிர்களை சாகுபடி (Cultivation) செய்ய வாய்ப்பு கிடைத்துள்ளது. விவசாயிகள் சேமித்து வைத்துள்ள நெல், கம்பு, சோளம், குதிரைவாலி, பயறு வகைகள், எண்ணெய் வித்து பயிர் விதைகளை தகுந்த ஈரப்பதத்தில் பராமரிக்க தவறினால் விதைத்தரம் கெடும்.

விதைப் பரிசோதனை

விதைப் பரிசோதனை செய்வதன் மூலம் அதிக முளைப்புத்திறன் உடைய விதைகளை தேர்வு செய்து வயலில் பயிர் எண்ணிக்கையை சிறப்பான முறையில் பராமரித்து அதிக மகசூல் (Yield), அதிக வருமானத்தையும் உயர்த்தலாம். மாவட்டம் தோறும் உள்ள விதை பரிசோதனை நிலையத்தில் ரூ.30 செலுத்தி விதைகளின் தரத்தை அறிந்து பயன்படுத்துவதன் மூலம் மகசூலினை அதிகரித்து வருமானத்தை பெருக்க இயலும்.

முளைப்பாரி நுட்பம்

விவசாயிகள் தங்கள் பயன்பாட்டிற்காக விதைகளை சேமித்து வைத்திருப்பர். பங்குனி, சித்திரை, ஆடி மாதங்களில் நடைபெறும் அம்மன் திருவிழாக்களின் போது கிராமத்தில் உள்ள அனைத்து விவசாயிகளிடம் இருந்தும் நெல், கம்பு, பயறு வகை பயிர்களின் விதைகளை பெற்று தனித்தனியே முளைக்க வைத்து, முளைப்பாரி வளர்த்து குளங்களில் கரைப்பர். இதன் மூலம் எந்ததெந்த விவசாயிகளின் விதை நன்றாக முளைத்து வீரியத்துடன் வளர்கிறது என்பதை கண்டறிந்து அவர்களிடம் இருந்து விதைகளை வாங்கி பயன்படுத்துவர்.

முளைப்புத்திறன்

விதைகளின் முளைப்புத்திறன் மக்காச்சோளம் 90 சதவீதம், நெல், எள், கொள்ளு 80, கம்பு, சோளம், ராகி, சிறுதானியங்கள், துவரை, பாசி, உளுந்து, தட்டை, மொச்சை, வீரியப்பருத்தி 75, நிலக்கடடை, சூரியகாந்தி, ஆமணக்கு, கத்தரி, தக்காளி, கீரை வகைகள் 70, பாகல், பீர்க்கை, புடலை, வெள்ளரி, சுரை, மிளகாய் 60 சதவீதம் இருக்க வேண்டும். விதைப் பரிசோதனை செய்வதன் மூலம் அதிக முளைப்புத்திறன் உடைய விதைகளை தேர்வு செய்து வயலில் பயிர் எண்ணிக்கையை நல்ல முறையில் பராமரித்து அதிக மகசூல் பெறலாம், என மதுரை விதை பரிசோதனை நிலைய அலுவலர் சிங்கார லீனா, விருதுநகர் வேளாண் அலுவலர்கள் ராமசாமி, சாய்லட்சுமி சரண்யா கூறினர்.

தொடர்புக்கு
கா.சுப்பிரமணியன், மதுரை
99528 88963.

மேலும் படிக்க

English Summary: Seed testing is essential for high yield!
Published on: 02 May 2021, 04:09 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now