தஞ்சை அருகே நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்ய வந்த 2 ஆயிரம் மூட்டை நெல் மழையில் நனைந்து நாற்றுக்கள் முளைத்து நாசமானதால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.
தஞ்சை மாவட்டத்தில் 2.50 லட்சம் ஏக்கர் சம்பா தாளடி சாகுபடி நடைபெற்றுள்ளது. தற்போது அறுவடை பணி தொடங்கியுள்ளது.
காட்டூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் அறுவடை செய்யப்பட்ட நெல் மணிகளை, காட்டூரிலுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு விற்பனைக்காக கடந்த 15 நாட்களுக்கு முன் கொண்டு வந்து கொட்டி வைத்துள்ளனர்.
கொள்முதல் செய்யவில்லை (Not purchased)
இந்நிலையில் தொடர் மழையின் காரணமாக நெல் மணிகளை கொள்முதல் செய்யாததால் அனைத்து நெல்மணிகளையும் ஒன்றாக கொட்டி தார்பாய் போட்டு மூடி வைத்து இருந்தனர்.
முளைத்துவிட்ட நெல்மணிகள் (Sprouted pearls)
தொடர் மழையால் நெல்மணிகளில் 50 சதவீதம் நாற்றுக்கள் முளைத்து விட்டன. மீதமுள்ள நெல்மணிகள் பூஞ்சை பிடித்தும், கருத்தும் சேதமாகி விட்டது. இங்கு கொட்டி வைத்துள்ள 5 ஆயிரம் மூட்டைகளில், 2 ஆயிரம் நெல் மூட்டைகளில் நாற்றுகள் முளைத்து நாசமடைந்துள்ளன.
இதற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து விவசாயிகள் கூறுகையில், 2ஆயிரம் மூட்டைகள் நாசமாகியுள்ளன.
மீதமுள்ள நெல் மணிகளை உலர்த்த, ஆட்களுக்கு கூலி, உணவுக்கு வழங்கினால் செலவு செய்த தொகை கிடைக்குமா? என்பது கேள்விக்குறியாகியுள்ளது என வேதனையுடன் கூறினர்.
சாலை மறியல் (Road Roko)
இதனிடையே சிதம்பரம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த தொடர் மழையினால் அறுவடைக்கு தயாராக இருந்த ஏராளமான ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது. தண்ணீர் உடனடியாக வடியாததால் வயலில் மூழ்கிய பயிர்கள் முளைக்கத் தொடங்கி விட்டது. இதுவரை அதிகாரிகள் நேரில் வந்து பயிர் பாதிப்பு குறித்து பார்வையிடவில்லை. கணக்கெடுப்பும் நடத்தவில்லை.
இதைக் கண்டித்து விவசாயிகள் சிதம்பரம் புறவழிச்சாலையில் நேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை சிதம்பரம் தாலுகா போலீசார் கைது செய்தனர். விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததால், வலுக்கட்டாயமாக கைது செய்தனர். அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
மேலும் படிக்க...
ஆஃப் பாயில் சாப்பிடுவதால் பறவைக் காய்ச்சல் பரவும் - மக்களே உஷார்!
கொழுப்பு இல்லா மோர் - உடல் எடையைக் குறைக்கும் Best Tonic!
ஆரோக்கியத்தைப் பெற வேண்டுமா? பாரம்பரிய உணவுகளுக்குத் திரும்புங்கள்!